தமிழகம்

தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவில் பல்லி இருந்த விவகாரம்: தனியார் கேட்டரிங் நிறுவன உரிமையாளர் மீது வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

ஆவடி: ஆவடி மாநக​ராட்சி தூய்மை பணி​யாளர்​களுக்கு வழங்​கப்​பட்ட காலை உணவில் பல்லி விழுந்து கிடந்த விவ​காரம் தொடர்​பாக தனி​யார் கேட்​டரிங் நிறுவன உரிமை​யாளர் மீது 4 சட்​டப்​ பிரிவு​களின் கீழ் ஆவடி போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்​துள்​ளனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆவடி மாநக​ராட்​சி​யில் பணிபுரிந்து வரும் தூய்மை பணி​யாளர்​களுக்கு தமிழக அரசு சார்​பில் நாள்​தோறும் காலை உணவு வழங்​கப்​படு​கிறது.

இந்த காலை உணவை, தெலங்​கானா மாநிலம், ஐதரா​பாத்தை தலை​மை​யிட​மாக கொண்ட தனி​யார் கேட்​டரிங் நிறு​வனம், ஆவடி, சின்​னம்​மன் கோயில் அருகே சமையல் கூடம் அமைத்து ஒப்​பந்த அடிப்​படை​யில் தயாரித்து வழங்​கு​கிறது.

இந்​நிலை​யில் நேற்று முன் தினம் காலை​யில் வழக்​கம்​போல் தூய்மை பணி​யாளர்​கள் காலை உணவை அருந்​தினர். அப்​போது, மண்​டலம் 3-க்கு உட்​பட்ட பருத்​திப்​பட்டு பகு​தி​யில் தூய்மை பணி​யில் ஈடு​பட்ட பணி​யாளர்​களுக்கு வழங்​கப்​பட்ட காலை உணவில், சாம்​பாரில் பல்லி இருந்தது. இதனால், 45-க்​கும் மேற்​பட்​டோர் வாந்​தி, மயக்​கம் ஏற்​பட்​டு, ஆவடி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இதில், வசந்​தா, எமிலி, விஜயலட்​சுமி, குமார் ஆகியோர் மட்​டும் உள் நோயாளி​களாக அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்​பினர். மற்​றவர்​கள் புறநோ​யாளி​கள் பிரி​வில் சிகிச்சை பெற்​று, நேற்று முன் தினமே வீடு திரும்​பினர்.

இதுகுறித்து உணவு பாது​காப்​புத் துறை அதி​காரி​கள் தனி​யார் கேட்​டரிங் நிறு​வனத்​தின் சமையல் கூடத்​தில் 16 உணவு மாதிரி​களை சேகரித்​து, சோதனைக்​காக சென்​னை - கிண்டி, திருநெல்வேலி - பாளை​யங்​கோட்​டை​யில் உள்ள ஆய்​வகங்​களுக்கு அனுப்​பி​யுள்​ளனர்.

ஆய்​வின் முடி​வில், தவறுகள் இருப்​பது தெரிய வந்​தால் சம்​பந்​தப்​பட்ட தனி​யார் கேட்​டரிங் நிறு​வனம் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என ஆவடி மாநக​ராட்சி நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

இதற்​கிடையே, பல்லி விழுந்து கிடந்த உணவை அருந்​தி​ய​தால் பாதிக்​கப்​பட்ட தூய்மை பணி​யாளர்​களில் ஒரு​வ​ரான குமார் ஆவடி காவல் நிலை​யத்​தில் நேற்று முன் தினம் மாலை புகார் அளித்​தார்.

அதன் பேரில் நடத்​திய முதல் கட்ட விசா​ரணை​யின் அடிப்​படை​யில் போலீ​ஸார், உணவு பாது​காப்பு மற்​றும் தர நிர்​ணயச் சட்​டப்​பிரிவு 59 உள்​ளிட்ட 4 சட்​டப்​பிரிவு​களின் கீழ், தனி​யார் கேட்​டரிங் நிறுவன உரிமை​யாளர்​ ஹரி மீது வழக்​குப்​ பதிவு செய்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT