தமிழகம்

அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: முன்​னாள் பள்​ளிக்​ கல்​வித்​துறை அமைச்​சருக்கு நெருக்​க​மானவர் என கூறி, தனி​யார் பள்​ளி​களிடம் ரூ. 100 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக தொடர்ந்த வழக்​கில், தனி​யார் பள்​ளி​கள் சங்க பொருளாளரின் முன்ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், டிடிசிபி மற்​றும் சிஎம்​டிஏ அங்​கீ​காரம் உள்​ளிட்ட பிற சட்​டப்​பூர்வ அனு​ம​தி​களை பெற்​றுத் ​தரு​வ​தாக கூறி, தமிழகம் முழு​வதும் பல தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிடம் இருந்து ரூ.100 கோடிக்​குமேல் வசூலித்து மோசடி செய்​துள்​ள​தாக அளிக்​கப்​பட்ட புகாரின் பேரில், தமிழ்​நாடு பெற்​றோர் ஆசிரியர் சங்​கத் தலை​வரான பி.டி.அரசகு​மார் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் மீது சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்​ளனர்.

இவ்வழக்​கில், பி.டி.அரசகு​மார் கைது செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், தமிழ்​நாடு தனி​யார் பள்​ளி​கள் சங்க பொருளாள​ரான முத்​துக்​கு​மார், முன்​ஜாமீன் கோரி மனு தாக்​கல் செய்​தார்.

இவ்வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தபோது, காவல்​துறை தரப்​பில், முன்​னாள் பள்​ளிக்​ கல்​வித்​துறை அமைச்​சர் தனக்கு நெருக்​க​மானவர் என கூறி, இந்த மோசடி அரங்​கேறி​யுள்​ளது.

இது தொடர்பாக 47 பள்​ளி​களின் நிர்​வாகி​கள் வாக்​குமூலம் அளித்​துள்​ளனர். ஆயிரம் பள்​ளி​களிடம், ரூ.100 கோடிக்​குமேல் வசூலித்​துள்​ளனர். எனவே,மனு​தா​ரருக்கு முன்​ஜாமீன் வழங்​கக்​கூ​டாது என வாதிடப்​பட்​டது.

மனு​தா​ரர் தரப்​பில், மனு​தா​ரருக்கு முன்​னாள் அமைச்​சருடனோ, தமிழக அரசுடனோ எந்த தொடர்​பும் இல்​லை. எனவே, முன்​ஜாமீன் வழங்க வேண்​டும் என கோரப்​பட்​டது. இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, முன்​ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்​டார்​.

SCROLL FOR NEXT