பள்ளி, கல்லூரிகளில் முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடிய தவெகவினர் மீது நடவடிக்கை கோரி வழக்கு

தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி, கல்லூரிகளில் முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடிய தவெகவினர் மீது நடவடிக்கை கோரி வழக்கு
Updated on
1 min read

சென்னை: பள்​ளி, கல்​லூரி​களில் மாணவர்​களை சிரமத்​துக்​குள்​ளாக்கி தமிழக முதல்​வரின் பிறந்​த​நாள் கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்ட தவெக​வினர் மற்​றும் பள்ளி நிர்​வாகங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி தொடரப்​பட்ட வழக்​கில், இது தொடர்​பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக வழக்​கறிஞரும், சென்னை மாநக​ராட்சி திமுக கவுன்​சிலரு​மான கவி​கணேசன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ``தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய்​யின் பிறந்​த​நாளை முன்​னிட்டு கடந்த ஜூன் 22 அன்று தமிழகம் முழு​வதும் உள்ள பள்​ளி, கல்​லூரி​களில் மாணவர்​களை வெயி​லில் நிற்க வைத்து தவெக கட்​சி, கொடி, சின்​னங்​களு​டன் கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இந்​நிகழ்ச்​சிகளில் மாணவர்​களிடம் பிறந்​த​நாள் வாழ்த்து பாட​வும், கோஷம் போட​வும் வற்​புறுத்​தி​யுள்​ளனர். குறிப்​பாக திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் தவெக தலை​வரின் முக வடி​வில் சுமார் 3 ஆயிரம் மாணவர்​களை வெயி​லில் அமர வைத்​துள்​ளனர்.

கல்வி நிலை​யங்​களில் மாணவர்​களை அரசி​யல் கொண்​டாட்​டங்​களுக்கு பயன்​படுத்​து​வது என்​பது கல்வி நிறு​வனங்​களின் நோக்​கத்​துக்கு விரோத​மானது. ஏற்​கெனவே கல்வி நிறு​வனங்​களில் அரசி​யல், மத சித்​தாந்​தம் தொடர்​பான நிகழ்ச்​சிகளை நடத்​தக்​கூ​டாது என தமிழக அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

எனவே கல்வி நிறு​வனங்​களில் அரசி​யல் நிகழ்ச்​சிகளை நடத்த தடை விதித்து பிறப்​பித்த அரசாணையை கண்​டிப்​பான முறை​யில் அமல்​படுத்த உத்​தர​ விட வேண்​டும்.

அத்​துடன் தமிழகம் முழு​வதும் உள்ள கல்வி நிறு​வனங்​களில் தமிழக முதல்​வரின் பிறந்​த​நாளை முன்​னிட்டு மாணவர்​களை சிரமத்​துக்​குள்​ளாக்கி அரசி​யல் கொண்​டாட்​டங்​களில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது விசா​ரணை நடத்தி சம்​பந்​தப்​பட்ட நிர்​வாகி​கள் மற்​றும் கல்வி நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும், எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஜெ. ரவீந்​திரன், பள்​ளி​கள், கல்​லூரி​கள் என கல்வி நிலை​யங்​களில் அரசி​யல் சித்​தாந்த நிகழ்ச்​சிகளை நடத்த தடை விதிக்​கும் விதி​களை கண்​டிப்​பான முறை​யில் அமல்​படுத்த உத்​தர​விட வேண்​டும், என வாதிட்​டார். அதையடுத்து நீதிப​தி​கள், இது தொடர்​பாக தமிழக அரசு பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்.

பள்ளி, கல்லூரிகளில் முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடிய தவெகவினர் மீது நடவடிக்கை கோரி வழக்கு
கங்கைகொண்டானில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் பேட்டரி ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in