தமிழகம்

துணை நடிகர் உயிரிழந்த வழக்கு: மறுவிசாரணை தாமதம் ஏன்? - டிஜிபி விளக்கம் தர உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: துணை நடிகர் சரண்​ராஜ் உயி​ரிழந்த வழக்​கில் மறு​விசா​ரணை​யில் தாமதம் ஏன் என்​பது குறித்து விளக்​கம் அளிக்க டிஜி​பிக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

விழுப்​புரம் மாவட்​டம் மலை​யனூரைச் சேர்ந்த துணை நடிகர் சரண்​ராஜ் (29), சென்னை மதுர​வாயலில் வசித்து வந்​தார்.

இவர் கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி வடபழனி ஆற்​காடு சாலை​யில் இருசக்​கர வாக​னத்​தில் சென்​றபோது, அதிவேக​மாக வந்த கார் மோதி உயி​ரிழந்​தார்.

காரை வேக​மாக ஓட்​டிவந்​த​தாக சாலி​கிராமத்​தைச் சேர்ந்த துணை நடிகர் பழனியப்​பன், அவருடன் பயணித்த துரைராஜ் ஆகியோர் மீது கிண்டி போக்​கு​வரத்து புலனாய்​வுப் பிரிவு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர்.

ஆனால், இது திட்​ட​மிட்ட படுகொலை என்று சரண்​ராஜின் தாயார் மாரியம்​மாள் சென்னை கூடுதல் அமர்வு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.

இதையடுத்து, வழக்கை மறு​விசா​ரணை செய்ய நேர்​மையான போலீஸ் அதி​காரி ஒரு​வரை டிஜிபி நியமித்து, 60 நாட்​களுக்​குள் துணை இறுதி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என நீதி​மன்​றம் கடந்த ஆக.28-ம் தேதி உத்​தர​விட்​டது.

நீதிபதி சஞ்​சய்​பாபா முன்பு இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மறு​விசா​ரணை நடத்த பரங்​கிமலை போக்​கு​வரத்து ஆய்​வாளர் மோகன்​ராஜ் கடந்த 21-ம் தேதி விசா​ரணை அதி​காரியாக நியமிக்​கப்​பட்​டுள்​ள​தாக காவல் துறை தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் தெரி​வித்​தார்.

இந்த தாமதத்​துக்கு கடும் அதிருப்தி தெரி​வித்த நீதிபதி, இறுதி அறிக்கை தாக்​கல் செய்ய எடுத்த நட​வடிக்கை குறித்​தும் டிஜிபி விளக்​கம் அளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை தள்​ளிவைத்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT