தமிழகம்

சென்னை ஓஎம்ஆர் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு கார் உள்ளே விழுந்தது

செய்திப்பிரிவு

சென்னை: ​திரு​வான்​மியூர் ராஜீவ்​காந்தி சாலை​யில், மெட்ரோ ரயில் பணி​களின் போது, நேற்று காலை திடீரென பெரிய பள்​ளம் ஏற்​பட்​டது. இதில் கார் விழுந்து தலைகீழாக கவிழ்ந்தது.

சென்​னை​யில், இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் 116 கி.மீ தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப் ​படு​கிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்​காட் வரையி​லான 3-வது வழித்தடம் ஒன்​றாகும். இந்த வழித்​தடத்​தில் திரு​வான்​மியூரிலிருந்து தரமணி நோக்கி ‘பவானி’ என்ற சுரங்​கம் தோண்டும் இயந்​திரம் மூலம் சுரங்​கப்​பாதை அமைக்​கும் பணி நடை​பெறுகிறது.

இந்​நிலை​யில், திரு​வான்​மியூர் மெட்ரோ ரயில் நிலை​யப் பகுதியிலிருந்து சுமார் 30 மீட்​டர் தொலை​வில், எல்​நெட் (Elnet) கட்டிடத்​துக்கு எதிரே உள்ள சாலை​யில் நேற்று காலை சுமார் 10:45 மணி​யள​வில், திடீரென ஒரு பெரிய பள்​ளம் உரு​வானது. அப்போது அந்த சாலை​யில் சென்று கொண்​டிருந்த கார் ஒன்று எதிர்​பா​ராத​வித​மாக அந்த பள்​ளத்​துக்​குள் விழுந்​தது. காரை ஓட்டி வந்த ஓட்​டுநர் பாது​காப்​பாக மீட்​கப்​பட்​டார். பள்​ளத்​தில் விழுந்த காரும் கிரேன் மூலம் வெளி​யில் எடுக்​கப்​பட்​டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து, அந்​தப் பகுதி பொது​மக்​களின் பாதுகாப்பு கருதி மூடப்​பட்​டது. பள்​ளத்தை கான்​கிரீட் கலவை கொண்டு மூடும் பணி​கள் தற்​போது தீவிர​மாக நடை​பெற்று வருகின்​றன. மேலும், இந்த விபத்து ஏற்​பட்​டதற்​கான காரணங்​கள் குறித்து மெட்ரோ ரயில் அதி​காரி​கள் தீவிர​மாக விசாரிக்கின்றனர். திரு​வான்​மியூர் ராஜீவ்​காந்தி சாலை​யில் பெரிய பள்​ளம் உரு​வான சம்​பவம் அப்​பகு​தி​யில்​ பரபரப்​பை ஏற்படுத்​தியது.

SCROLL FOR NEXT