தமிழகம்

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு: சான்றிதழை முழுமையாக பதிவேற்ற தேர்வர்களுக்கு அவகாசம்

செய்திப்பிரிவு

சென்னை: நேர்​காணல் இல்​லாத பதவி​களை உள்​ளடக்​கிய ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​கள் தேர்​வில் சான்​றிதழ்​களை முழு​மை​யாகப் பதிவேற்​றம் செய்ய தேர்​வர்​களுக்கு கால அவகாசம் அளிக்​கப்​பட்​டுள்​ள​தாக டிஎன்​பிஎஸ்சி தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்​தப்​பட்ட ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​கள் தேர்​வில் (நேர்​காணல் இல்​லாத பதவி​கள்) தேர்​வர்​களால் பதிவேற்​றம் செய்​யப்​பட்ட சான்​றிதழ்​கள் மற்​றும் ஆவணங்​கள் சரி​பார்க்​கப்​பட்​டன.

          

அப்​போது சில தேர்​வர்​கள் ஒரு சில சான்​றிதழ்​களை முழு​மை​யாக​வும், சரி​யாக​வும் பதிவேற்​றம் செய்​யாமல் குறை​பாட்​டுடன் வைத்​திருப்​பது கண்​டறியப்​பட்​டது. எனவே, அத்​தகைய தேர்​வர்​கள் விடு​பட்ட சான்​றிதழ்​களை முழு​மை​யாகப் பதிவேற்​றம் செய்​ய​வும், குறை​களை சரிசெய்​ய​வும் ஏப்​ரல் 6-ம் தேதி வரை இறுதி வாய்ப்பு அளிக்​கப்​படு​கிறது.

அந்த தேர்​வர்​களின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியல் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக அவர்​களுக்கு குறுஞ்​செய்​தி, மின்​னஞ்​சல் வாயி​லாக தகவலும் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் சான்​றிதழ்​களை பதிவேற்​றம் செய்​யாத தேர்​வர்​களின் விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

அவர் வெளி​யிட்​டுள்ள மற்​றொரு செய்​திக்​குறிப்​பில், “ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​கள் தேர்​வில் (நேர்​முகத் தேர்வு பதவி​கள்) இடம்​பெற்​றுள்ள பதவி​களுக்​கான தேர்​வு​கள் மார்ச் 7 மற்​றும் 8-ம் தேதி நடத்​தப்​பட்​டன.

தற்​போது கட்​டாய தமிழ் மொழி தகு​தித்​தாள் தேர்வு மற்​றும் வேளாண்​மை, வணிக நிர்​வாகம், எலெக்ட்​ரிக்​கல் மற்​றும் எலெக்ட்​ரானிக்ஸ் இன்​ஜினீயரிங், நிதி மற்​றும் செல​வுக் கணக்​கு, சட்​டம், மெக்​கானிக்​கல், உற்​பத்தி பொறி​யியல் ஆகிய பாடங்​களுக்​கான உத்​தேச விடைகள் (கீ ஆன்​ஸர்) தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

தேர்​வர்​கள் உத்​தேச விடைகள் மீது இணை​ய​வழி​யாக ஏப்​ரல் 3-ம் தேதி வரை முறை​யீடு செய்​ய​லாம். அஞ்​சல் வழி​யாக​வும், மின்​னஞ்​சல் வாயி​லாக​வும் பெறப்​படும் முறை​யீடு​கள் ஏற்​றுக்​கொள்​ளப்பட மாட்​டாது” என்று கூறியுள்​ளார்​.

SCROLL FOR NEXT