சோழிங்கநல்லூரில் திமுக வேட்பாளருக்கு சேவல், வேல் பரிசு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

 
தமிழகம்

சோழிங்கநல்லூரில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

செய்திப்பிரிவு

சோழிங்கநல்லூர்: சோழிங்​கநல்​லூர் தொகுதி திமுக வேட்​பாளர் எஸ். அரவிந்த் ரமேஷ் சென்னை மாநக​ராட்சி 199 வது வார்டு பகு​தி​யில் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டார்.

அப்​போது 199 வது வட்ட திமுக துணை செய​லா​ளர் க.ராஜேஷ் குமார் ஏற்​பாட்​டில் வெற்​றி​யின் அடை​யாள​மாய் வேட்​பாளர்க்கு வேலும், செவலும் வழங்கி உற்​சாக வரவேற்பு அளித்​தார்.

அதை தொடர்ந்து மாமன்ற உறுப்​பினர் சங்​கர் ஏற்​பாட்​டில் வாக்கு சேகரிக்க சென்ற இடத்​தில் வேட்​பாளர் மீது பூ மழை பெய்து வரவேற்று ஆள் உயர மாலை அணி​வித்து செங்​கோல் வழங்​கி​யும் உற்​சாக​மாக வரவேற்​றனர்.

சோழிங்​கநல்​லூர் தொகு​தி​யில் திரா​விட ஜனநாயக மக்​கள் கட்சி சார்​பில் வழக்​கறிஞர் எம். கிறிஸ்​து​தாஸ் போட்​டி​யிடு​கிறார். இவர் பரிசு பெட்​டகம் சின்​னத்​துக்கு வாக்​களிக்​கும் பள்​ளிக்​கரணை பகு​தி​யில் தீவிர​வாக்கு சேகரிப்பு ஈடு​பட்​டார்.

பள்ளிக்கரணையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திராவிட ஜனநாயக மக்கள் கட்சி வேட்பாளர்.

அப்​போது அவர் பேசும்​போது பள்​ளிக்​கரணை பகு​தி​களில் புறம்​போக்கு நிலத்​தில் ஏராள​மான வசித்து வரு​கின்​றனர்.

நான் சட்​டப்​பேரவை உறுப்​பின​ராக தேர்வு செய்​யப்​பட்​டால் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும். பாதாள சாக்​கடை இணைப்​பு​கள் கொடுக்​கப்​பட்டு இன்​னும் பயன்​பாட்​டுக்கு வரப்​ப​டா​மல் உள்​ளது பயன்​பாட்​டிற்கு கொண்​டுவர நடவடிக்கை எடுக்​கப்​படும் என கூறி வாக்​கு சேகரிப்​பில்​ ஈடுபட்​டார்​.

SCROLL FOR NEXT