அகத்தியா நகரில் ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம்.

 
தமிழகம்

வில்லிவாக்கம் தொகுதியில் வீதிகள்தோறும் வலம் வரும் வேட்பாளர்கள்

துரை விஜயராஜ்

விஐபி தொகு​தி​யாக மாறி​யுள்ள வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்​பில் கார்த்​திக் மோகன்களம் காண்​கிறார்.

அதி​முக சார்​பில் முன்​னாள் எம்​.பி.​யான எஸ்​.ஆர்​.​விஜயகுமார், நாதக சார்​பில் ரோஷினி, தவெக சார்​பில் அக்​கட்​சி​யின் தேர்​தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலா​ளர் ஆதவ் அர்​ஜுனா போட்​டி​யிடு​கின்​றனர். இத்​தொகு​தி​யில், சுயேச்​சைகள் உள்பட 28 பேர் களத்​தில் உள்ளனர்.

திமுக - உங்​கள் வீட்​டுப் பிள்​ளை​யின் உறு​தி​மொழி

திமுக வேட்​பாளர் கார்த்​திக் மோகன், 5 ஆண்​டு​கால சாதனை​களை பட்​டியலிட்​டு, வாக்கு சேகரித்து வரு​கிறார்.

          

மேலும், “திமுக தேர்​தல் அறிக்​கை​யில் இடம்​ பெற்​றுள்ள ரூ. 8,000 கூப்​பன் திட்​டம் ஒரு வரப்​பிர​சாத​மாக அமை​யும். இது வெறும் தேர்​தல் வாக்​குறுதி அல்ல, உங்​கள் வீட்​டுப் பிள்​ளை​யின் உறு​தி​மொழி” என பிரச்​சா​ரம் செய்து வருகிறார்.

வில்லிவாக்கம் பாரதி நகரில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் பிரச்சாரம்.

அதி​முக - நல்ல மாற்​றம் நிச்​ச​யம் என நம்​பிக்கை

அதி​முக வேட்​பாளர் எஸ்​.ஆர்​.​விஜயகு​மார், அதிமுக ஆட்சிக் காலத்​தில் கொண்டு வரப்​பட்ட நலத் திட்டங்களையும், தொகு​திக்கு செய்த நன்​மை​களை​யும் மக்​களிடம் நினை​வூட்டி வாக்கு சேகரித்து வரு​கிறார்.

அயனாவரம் வெள்ளாளர் தெருவில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் பிரச்சாரம்.

மேலும், தற்​போதைய ஆட்​சி​யின் குறை​களைச் சுட்டிக்காட்​டு​வதோடு, மக்​களின் கோரிக்​கைகளை இன்​முகத்​துடன் கேட்​டு, ‘நிச்​ச​யம் நல்ல மாற்​றம் பிறக்​கும்’ என்று நம்பிக்​கையூட்டி வரு​கிறார்.

வில்லிவாக்கம் கடை வீதிகளில் ரோஷினி பிரச்சாரம்.

நாதக-பிரச்​சினை​களுக்கு முற்​றுப்​புள்ளி வைக்க உறுதி

நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் ரோஷினி, ‘விண்ணைத்தொடும் வில்​லி​வாக்​கம்’ என்ற தொலைநோக்குப் பார்​வை​யுடன் முன்​வைக்​கும் வாக்குறுதி​கள் தொகுதி மக்​களிடையே பெரும் கவனத்தை ஈர்த்​துள்​ளன. அனைத்​துப் பிரச்சினைகளுக்கும் முற்​றுப்​புள்ளி வைப்​பதே எனது இலக்கு என பிரச்​சா​ரம் செய்து வருகிறார்.

தவெக - உறவு முறை சொல்லி பாசமழை

தவெக வேட்​பாளர் ஆதவ் அர்​ஜு​னா, ஒவ்​வொரு வீட்​டிலும் ஒரு​வ​ராகத் தன்னை அடை​யாளப்​படுத்​திக் கொள்​ளும் வகை​யில், வாக்​காளர்​களை அக்​கா, தங்​கை என உறவு​முறை சொல்லி அழைத்து சென்​டிமெண்ட் பிரச்​சா​ரத்தை முன்​னெடுத்​துள்​ளார்.

ஊழலற்ற, நவீன வசதி​கள் கொண்ட ஒரு முன்​மா​திரி வில்லி​வாக்​கத்தை உரு​வாக்​கித் தரு​வேன் என உறுதி அளித்து வருகிறார். வில்​லி​வாக்​கம் தொகுதி விஐபி தொகுதி​யாக மாறி உள்​ள​தால் பிரச்​சா​ர​மும் வீரிய​முடன் காணப்​படுகிறது.

SCROLL FOR NEXT