செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா
மதுரை: அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மதுரை மாவட்டத்தில் எதிர்பார்த்தபடியே மீண்டும் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா ஆகிய மும்மூர்த்திகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஏற்கெனவே தேர்தல் பணியை தொடங்கிய நிலையில், நேற்று முதல் தீவிரம் காட்டியுள்ளனர்.அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
இந்த பட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு (மதுரை மேற்கு), சட்டபேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் (திருமங்கலம்), அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம்) பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அதிமுகவில் மாவட்டத்தில் அதி கார மையங்களான மூவரும், மாநகரம், புறநகர் மேற்கு, புறநகர் கிழக்கு மாவட்டங்களில் மாவட்டச் செயலாளராகவும் உள்ளனர். எதிர்பார்த்ததுபோல், இவர்களுக்கு அவரவர் விரும் பிய ஏற்கெனவே எம்எல்ஏ-க் களாக உள்ள தொகுதிகளே மாற்றம் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ள அவர்கள் விவரம் வருமாறு:
மதுரை மேற்கு:
செல்லூர் கே.ராஜூ 1952-ம் ஆண்டு அக்.7-ல் (73) பிறந்தார். பிஎஸ்சி படித்துள்ளார். மனைவி ஜெயந்தி. சவுமியா,ரம்யா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். 2011, 2016, 2021 தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று, 2011-ல் இருந்து 10 ஆண்டுகள் கூட்டுறவு துறை அமைச்சராக இருந்தார். கலகலப்பாக பேட்டி அளிப்பதில் தனித்துவம் பெற்றவர்.
திருமங்கலம்:
ஆர்.பி.உதயகுமார் பி.காம், எம்எஸ்டபிள்யூ, பிஎல் பயின்றவர். முதன்முறையாக 2011-ல் சாத்தூரில் போட்டியிட்டு வென்று, தகவல் தொடர்புத்துறை அமைச் சரானார். பிறகு விளையாட்டு, இளைஞர் நலன், வருவாய்த் துறை அமைச்சரானார்.
2016-ல் திருமங்கலம் தொகுதி யில் வென்று வருவாய்த் துறை அமைச்சரானார். 2021-ல் மீண்டும் திருமங்கலம் தொகுதியில் வென்று, தற்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும், மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ளார்.
அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் மூலம் தொகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச திறன் பயிற்சி வழங்கினார். கரோனா காலத்தில் 150 நாட்களாக 5 வேளையும் சத்தான உணவை பல்லாயிரம் பேருக்கு வழங்கியவர்.
திருப்பரங்குன்றம்:
வி.வி.ராஜன் செல்லப்பா 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட் டத்தில் கலந்துகொண்டார். 1969-ல் திமுக மாணவர் அணி பொறுப்பில் இருந்தார். பின்னர் 1972-ல் அதிமுகவில் இணைந்து சட்டக் கல்லூரி மாணவர் அணிச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர், மாநகர மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகளை வகித்தார்.
தற்போது புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ-வாக உள்ளார். மகன் வி.வி.ராஜ்சத்யன் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநிலச் செயலாளராக உள்ளார். 3 பேரையும் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.