தமிழகம்

வேட்பாளர் வரலாறு: ஜோலார்பேட்டையில் 4-வது முறையாக களம் காணும் கே.சி.வீரமணி பின்புலம் என்ன?

செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை சட்​டப்​பேரவை தொகு​தி​யில் அதி​முக சார்​பில் முன்​னாள் அமைச்​சர் கே.சி.வீரமணி 4-வது முறை​யாக போட்​டி​யிடு​கி​றார். தமிழக சட்​டப்​பேர​வைக்​கான தேர்​தல் ஏப். 23-ம் தேதி நடைபெறுகிறது.

அதி​முக கூட்​ட​ணி​யில் தொகுதி உடன்​பாடு ஏற்​பட்டு கூட்டணி கட்​சிகள் போட்​டி​யிடும் தொகு​தி​கள் குறித்த அறி​விப்பை அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நேற்று அறி​வித்​தார். முன்​ன​தாக அதி​முக சார்​பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்​கட்ட பட்​டியலை அதிமுக தலைமை கழகம் நேற்று காலை வெளி​யிட்​டது.

அதன்​படி, திருப்​பத்​தூர் மாவட்​டத்​தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகு​தி​களில் அதி​முக​வும், ஒரு தொகுதியில் அமமுக​வும் போட்​டி​யிடு​கின்​றன. இதில், ஜோலார்​பேட்டை தொகு​தி​யில் முன்​னாள் அமைச்​சர் கே.சி.வீரமணி 4-வது முறை​யாக போட்​டி​யிடு​கி​றார். அதற்கான அறி​விப்பு நேற்று வெளி​யானது.

          

தொகுதி மறுசீரமைப்​புக்கு பிறகு ஜோலார்​பேட்டை தொகு​தி​யின் முதல் வேட்​பாள​ராக கே.சி.வீரமணி அதி​முக சார்​பில் போட்​டி​யிட்​டார்.

தொடர்ந்து 2 முறை வெற்றிபெற்ற கே.சி.வீரமணி கடந்த தேர்​தலில் திமுக வேட்​பாளர் தேவ​ராஜி​யிடம் குறைந்த வாக்கு வித்​தி​யாசத்​தில் தோல்​வியடைந்​தார்.

திருப்​பத்​தூர் மாவட்​டம் ஜோலார்​பேட்டை அடுத்த இடையப்​பட்டி காந்திரோடு பகு​தி​யைச் சேர்ந்த சின்​ன​ராசு - மணியம்மாள் தம்​ப​தி​யின் மகன் கே.சி.வீரமணி(62). பி.ஏ.வரலாறு‌ படித்த இவருக்கு 2 மனை​வி​கள். முதல் மனைவி மேகலை. 2-வது மனைவி பத்​மானி. இவர், 7 ஆண்​டு​களுக்கு முன்பு உயி​ரிழந்​தார். இவர்​களுக்கு அகல்யா (26), யாழினி (21) என்ற 2 மகள்​களும், இனிய​வன்​(22) என்ற மகனும் உள்​ளனர்.

விவ​சாய குடும்​பத்​தைச் சேர்ந்த கே.சி.வீரமணி கடந்த 1993-ம் ஆண்டு அதி​முக​வில் இணைந்​தார்.

அதி​முக கிளை செய​லா​ளர், ஒன்​றியச்​செய​லா​ளர், மாவட்ட துணைத்​தலை​வர், மாவட்ட விவ​சாய பிரிவு செய​லா​ளர் என பல்வேறு பொறுப்​பு​கள் வகித்து 2006‌ முதல் தற்​போது வரை மாவட்​டச்​செய​லா​ள​ராக​வும், ஒருங்​கிணைந்த வேலூர் மாவட்ட அதி​முக​வில் அதி​காரம் மிக்​கவ​ராக​வும் கே.சி.வீரமணி உள்​ளார்.

கடந்த 2001-ல் ஜோலார்​பேட்டை ஒன்​றி​யத்​தலை​வ​ராக​வும், 2011 மற்​றும் 2016‌-ல் நடை​பெற்ற தேர்​தலில் வெற்றி பெற்று சட்​டப்​பேரவை உறுப்​பின​ராக​வும், சுகா​தா​ரம், பள்ளி கல்வி, இளைஞர் விளை​யாட்டு நலன், வணி​கவரி மற்​றும் பத்​திரப்​ப​திவு துறை அமைச்​ச​ராக பதவி வகித்​தார்.

4-வது முறை​யாக ஜோலார்​பேட்டை தொகு​தி​யில் அதி​முக சார்​பில் போட்​டி​யிடும் கே.சி.வீரமணி இந்த தேர்​தலில் நிச்ச​யம் வெற்​றி​பெற்று ஆக வேண்​டும் என்ற கணக்​கில் பல அரசி​யல் காய்​களை நகர்த்தி வரு​கி​றார். அதேநேரத்தில், இவரை எதிர்த்து திமுக சார்​பில் களம் காணும் வேட்​பாளரை வெற்​றி​பெற செய்து இந்த முறையும் தி​முக​வின் கோட்​டை​யாக ஜோலார்​பேட்டைதொகு​தியை மாற்ற வேண்​டும் என்ற முனைப்​பில் தி​முக​வினர்​ தேர்​தல்​ பிரச்​சா​ரங்​களை முன்​னெடுத்​து வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT