தமிழகம்

வேட்பாளர் வரலாறு: கலசப்பாக்கத்தில் போட்டியிடும் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பின்புலம் என்ன?

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிட உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள 23 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக் கட்சியின் பொதுச்செய லாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிட உள்ளார். இவர், பிஎஸ்சி அக்ரி, பிஎல் படிப்பு முடித்துள்ளார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். கடந்த 1982-ல் கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழக அதிமுக மாணவர் அணி செயலாளர். 1989-ல் கலசப்பாக்கம் தொகுதி யில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார்.

          

1996-ல்போளூர் தொகுதியில் போட்டியிட்டார். 1998-ல் திருவண்ணாமலை மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். 2001-ல் கலசப்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர். 2006-ல் கலசப்பாக்கம் தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்றார்.

2011-ல் மீண்டும் கலசப் பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று உணவு துறை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு, கல்வி துறை, வேளாண்மை துறை அமைச்சராக இருந்துள்ளார்.

2018-ல் திருவண்ணாமலை மாவட்ட ஆவின் பெருந்தலைவர். 2019-ல் திருவண்ணாமலை மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். 2021 முதல் தற்போது வரை போளூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

SCROLL FOR NEXT