புதுச்சேரி: புதுச்சேரியில் இரு நாட்களில் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில் நாளை அமித்ஷா, ராகுல். ஸ்டாலின், சீமான் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. இரு நாட்களில் அங்கு பிரச்சாரம் ஓய்கிறது. கடைசி இரு நாட்களில் முக்கியத் தலைவர்கள் புதுச்சேரியில் பிரச்சாரத்துக்கு குவிகின்றனர்.
மத்திய உள்துரை அமைச்சர் அமித் ஷா நாளை தனிவிமானத்தில் கொச்சியில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு புதுச்சேரி வருகிரார். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மண்ணாடிப்பட்டு திருக்கனூரில் பிரச்சாரக் கூட்டத்தில் மாலை பங்கேற்கிறார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை டெல்லியிலிருந்து சென்னை வந்து அங்கிருந்து விமானம் மூலம் புதுச்சேரிக்கு வருகிறார். ஈசிஆரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பகல் 11 மணியளவில் பங்கேற்கிறார். அதேபோல் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதுச்சேரி வருகிறார்.
அவர் நாளை மாலை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட மைதானத்தில் மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அத்துடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமானம் பிரச்சாரம் செய்கிறார். பிரச்சார இறுதி நாளில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா, திருமாவளவன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.