கம்போடியாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த லேக்னா, அவரது காதலன் அஜின்தாஸை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

 
தமிழகம்

குமரி மாவட்ட இளைஞரை கரம்பிடித்த கம்போடியா பெண்

உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தி உற்சாகம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கம்​போடி​யா​வில் இருந்து வந்த இளம்பெண் கன்​னி​யாகுமரி இளைஞரை கரம்​ பிடித்​தார். ‘காதலுக்கு அன்பு மட்​டுமே நிரந்தர மொழி’ என அப்போது அவர் கூறி​னார்.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் மார்த்​தாண்​டம் அருகே உள்ள இடைக்​கோட்டைச் சேர்ந்​தவர் சத்​தி​ய​தாஸ். இவரது மகன் அஜின்​தாஸ் (25). ஓட்​டல் மேனேஜ்மெண்ட் படித்த இவர், கம்​போடியா நாட்​டில் உள்ள உணவகம் ஒன்​றில் வேலை பார்த்து வந்​தார். அந்​நாட்​டைச் சேர்ந்த லேக்னா (26) என்ற பெண்​ணும் அதே ஓட்​டலில் பணி​யாற்​றிய​போது, இரு​வருக்​கும் நட்பு ஏற்​பட்​டு, அது காதலாக மலர்ந்​தது.

இந்​நிலை​யில், அஜின்​தாஸ் சொந்த ஊருக்கு வந்த நிலை​யில், லேக்​னா​வும் அவரும் செல்​போனில் பேசி காதலை தொடர்ந்​துள்​ளனர். சமீபத்​தில் அஜின்​தாஸின் தந்தை இறந்த நிலை​யில், அவருக்கு ஆறு​தல் கூறு​வதற்​காக குமரி மாவட்​டம் இடைக்​கோட்​டில் உள்ள காதலன் வீட்​டுக்கு லேக்னா வந்​துள்​ளார். அப்​போது அஜின்​தாஸின் உறவினர்​களுக்​கு, இரு​வரின் நட்​பும் தெரிய​வந்​துள்​ளது.

தாங்​கள் இரு​வரும் திரு​மணம் செய்​து​கொள்ள விரும்​புவ​தாக லேக்னா தெரி​வித்​துள்​ளார். இதற்கு அஜின்​தாஸின் குடும்​பத்​தினர் சம்​மதம் தெரிவிக்​கவே, கம்​போடியா சென்ற லேக்​னா, அங்​கிருந்து திரு​மணத்​துக்கு தேவை​யான ஆவணங்​களு​டன் மீண்​டும் கன்னியாகுமரிக்கு வந்​துள்​ளார். மிடாலக்​காட்​டில் உள்ள கிறிஸ்தவ தேவால​யத்​தில் அஜின்​தாஸின் குடும்ப வழக்​கப்​படி திரு​மணம் நடந்​தது. உறவினர்​கள், நண்​பர்​கள் அவர்​களை வாழ்த்​தினர்.

நாடு விட்டு நாடு வந்து காதலனை கரம்​பிடித்த லேக்னா கூறும்​போது, ‘கம்​போடி​யா​வைச் சேர்ந்த நான், இந்​தி​யா​வின் குமரி மாவட்​டத்​துக்கு எனது காதலர் அஜின்​தாஸை தேடி வந்​தேன். நாங்​கள் கம்​போடி​யா​வில் ஒன்​றாக வேலை செய்த இடத்​தில் இந்​திய உணவை சாப்​பிட விரும்​பினேன். அப்​போது, காதலர் தயார் செய்து கொடுத்த ருசி​யான உணவை இரு​வரும் பாதிப் பாதி​யாக பகிர்ந்து சாப்​பிட்​டோம். அவரின் அர்ப்​பணிப்​பும், அன்​பும் எனக்கு பிடித்துவிட்​டது. காதலுக்கு அன்பு மட்​டுமே நிரந்தர மொழி’ என்​றார்.

SCROLL FOR NEXT