தமிழகம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தனித் தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை கடந்த அக்​டோபர் 9-ம் தேதி இரு மையங்​களில் வெற்​றிகர​மாக நிறைவடைந்​தது.

பின்​னர் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வேட்பாளர்களின் பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் மூடப்​பட்டு சீல்வைக்​கப்​பட்​டன. பின்​னர் அந்த இயந்​திரங்​கள் அனைத்​தும் சிசிடிவி கேமரா மற்​றும் பலத்த போலீஸ் பாது​காப்​புடன் கூடிய காப்​பறை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

சென்னை உயர் நீதி​மன்​றம் தேர்​தல் வழக்​கு​களின் பட்​டியலை இறுதி செய்​யும் வரை, தேர்​தல் ஆணை​யத்​தால் வரையறுக்கப்பட்ட பாது​காப்பு நெறி​முறை​களின்​படி இந்த இயந்திரங்​கள் காப்​பறை​யிலேயே பாது​காப்​பாக வைக்கப்பட்டிருக்​கும். தேர்​தல் தொடர்​பான வழக்கு ஏதே​னும் நீதிமன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டால் அதற்கு தீர்வு காணப்படும் வரை இயந்​திரங்​கள் காப்​பறை​யிலேயே தொடர்ந்து பாது​காக்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT