தமிழகம்

மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுகவுக்கு ஆறுதலா, எச்சரிக்கையா?

செய்திப்பிரிவு

சென்னை: இரு தொகு​தி​களி​லும் முக்​கிய​மான கூட்​டணி கட்​சிகள் இல்​லாமல் தனித்​துப் போட்​டி​யிட்ட திமுக 2-ம் இடத்​தைப் பிடித்​துள்​ளது. கடந்த ஏப்​ரல் பொதுத் தேர்​தலில் தாராபுரத்​தில் 64,373 வாக்​குகளை பெற்ற திமுக​வுக்​கு, தற்​போது 57,370 வாக்​கு​கள் கிடைத்​துள்​ளன.

இதில் வாக்கு எண்​ணிக்கை குறைந்​த​போதும், அதன் வாக்கு சதவீதம் அதே நிலை​யில் நீடிக்​கிறது. மது​ராந்​தகத்​தில் கடந்த முறை 59,838 வாக்​கு​களு​டன் 3-ம் இடத்​தில் இருந்த திமுக, தற்​போது 54,008 வாக்​கு​களுடன் 2-ம் இடத்​துக்கு முன்​னேறி​யுள்​ளது. எனினும், அதன் வாக்கு சதவீதம் சுமார் ஒரு சதவீதம் குறைந்​துள்​ளது.

திமுக தனக்​கான வாக்கு வங்​கியை தக்க வைத்​திருப்​பது இந்த முடிவு​கள் மூலம் தெரி​கிறது. எனினும், இதை மட்​டுமே வைத்​துக் கொண்டு ஆளுங்​கட்​சி​யான தவெக​வின் எழுச்​சியை வீழ்த்​தி​விட முடி​யுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த 32 சதவீத வாக்​குகளைத் தாண்​டி, முதல்​முறை வாக்காளர்​கள், இளைஞர்​கள், நடுநிலை​யாளர்​களை ஈர்த்​தால் மட்​டுமே இனி வரும் தேர்​தல்​களில் வெற்​றியை வசப்​படுத்த முடி​யும். காலத்​துக்​கேற்ப புதிய தேர்​தல் வியூ​கங்​களை வகுக்க வேண்​டிய கட்​டா​யம் திமுக​வுக்கு ஏற்​பட்​டுள்​ளது. அதற்​கேற்ப, கட்சி மறுசீரமைப்​புப் பணி​களை திமுக விரைந்து முன்​னெடுக்​குமா என்​பதே தற்​போதைய எதிர்​பார்ப்​பாக உள்​ளது.

SCROLL FOR NEXT