தமிழகம்

அரசு பேருந்து கட்டணத்தில் 500 ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயார்: பேருந்து உரிமையாளர்கள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு பேருந்து கட்​ட​ணத்​திலேயே 500 ஆம்னி பேருந்​துகளை இயக்கத் தயா​ராக உள்​ள​தாக ஆம்னி பேருந்​துகள் உரிமை​யாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை ஆம்னி பேருந்​துகள் உரிமை​யாளர்​கள் மற்​றும் ஆபரேட்​டர்​கள் சங்​கத்​தினர் நேற்று சந்​தித்​துப்பேசினர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் சங்​கத்​தின் தலை​வர் பாண்​டியன் கூறிய​தாவது: விழாக்​காலங்​களில் கட்டண உயர்வு என்ற குற்​றச்​சாட்டு தொடர்ந்து பல்​வேறு ஆண்​டு​களாக வைக்​கப்​பட்டு வரு​கிறது.

அதற்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் வகை​யில், எங்​கள் சங்​கத்தைச் சேர்ந்த 500 பேருந்​துகள் ஆண்டு முழு​வதும் அரசு பேருந்து கட்​ட​ணத்​திலேயே இயக்​கு​வதற்கு அனு​மதி கோரி விண்​ணப்​பம் கொடுத்​துள்​ளோம்.

500 பேருந்​துகளை அரசு பேருந்து கட்​ட​ணத்​திலேயே இயக்கத் தயா​ராக இருக்​கிறோம் என்று கூறி​யுள்​ளோம். முடிவு செய்து சொல்​வ​தாக கூறி​யிருக்​கிறார்​கள். ஆம்னி பேருந்​துகளுக்​கும் சுற்​றுலா பேருந்​துகளுக்​கும் தனித்​தனி​யாக பெர்​மிட் வழங்க வேண்​டும் என்ற கோரிக்​கையை வைத்​துள்​ளோம்.

அது பரிசீலனை​யில் இருப்​ப​தாக கூறி​யுள்​ளார். சுற்​றுலா பேருந்​துகளுக்கு அனு​மதி கொடுத்​தால் சுற்​றுலா வளர்ச்சி அடை​யும். தற்​போது ஒரு ரூபாய் லஞ்​சம் இல்​லாமல் 40 பேருந்​துகளுக்கு பெர்​மிட் கிடைத்​துள்​ளது.

கடந்த ஆட்​சி​யில் இதே பெர்​மிட் வாங்க ரூ.5 லட்​சம் கொடுத்​தோம். ஆர்​டிஒ அலு​வல​கத்​தில்​தான் முதல் ஊழலே இருக்​கும், ஆனால், இப்​போது யாருமே லஞ்​சம் கேட்​பது இல்லை.

இந்த மாற்​றத்தை நாங்​கள் வரவேற்​கிறோம். முன்பு அமைச்​சர்​களிடம் போய்​விட்​டுத்​தான் வரவேண்​டும். இப்​போது அதி​காரி​களே கொடுக்​கிறார்​கள். இந்த மாதிரி மாற்​றம் நல்ல வரவேற்பை பெற்​றுள்​ளது. இப்​போது எல்லா வேலைகளும் எந்த லஞ்​ச​மும் இல்​லாமல் நடக்​கிறது.

அதி​காரி​களை மாற்​றிக்​கொண்டே இருக்​கிறார்​கள். இதனால், இடைத்​தரகர்​களுக்கு வேலை நடப்​பது இல்​லை.

இடைத்​தரகர்​கள் மறு​படி​யும் பணம் கொடுக்க முயற்சி செய்​கிறார்​கள். அவர்​களுக்கு ஒத்​துழைப்பு வழங்​காத பட்​சத்​தில் பொய்​யான தகவலை சொல்லி இடமாற்​றம் செய்ய வைக்​கிறார்​கள்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT