தமிழகம்

சென்னை மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய 7 பேர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

சென்னை: ​மாநக​ராட்​சி​யில் லஞ்​சம் வாங்​கிய 7 அலு​வலர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளனர். 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

கரூர் மக்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் பேசிய முதல்​வர் விஜய், “அரசு அலு​வல​கங்​களில் லஞ்​சம் கேட்​டால் கொடுக்​காதீர்​கள். என் பெயரை சொல்​லுங்​கள்” என அறி​வித்​தார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் தமிழகம் முழு​வதும் அரசு அலுவலகங்களில் சோதனையை தீவிரப்​படுத்​தினர். பத்​திரப் ​பதிவு, சாலை போக்​கு​வரத்து அலு​வல​கங்​கள், மாநக​ராட்சி அலுவல​கங்​களில் சோதனை நடத்​தினர். அப்​போது டிஜிட்​டல் பரிவர்த்​தனை மூலம் லஞ்​சம் கைமாறியதை கண்​டறிந்​ததோடு ரொக்கப் பணத்​தை​யும் பறி​முதல் செய்​தனர்.

சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்​பேட்​டை, கோடம்​பாக்​கம், பெருங்​குடி ஆகிய 6 மண்டல அலு​வல​கங்​களில் கடந்த 3-ம் தேதி நடை​பெற்ற சோதனை​யில் கணக்​கில்​வ​ராத பணம் கைப்​பற்​றப்​பட்​டது. யுபிஐ பரிவர்த்​தனை மூலம் லஞ்​சம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மாநக​ராட்சி மண்​டலங்​களில் நடை​பெற்ற சோதனை அடிப்படையி​லான அறிக்​கைகளை வழங்கியதன் அதனடிப்படையில், 7 பேரை மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​. சமீரன் சஸ்​பெண்ட் செய்து உத்​தர​விட்​டுள்​ளார். திரு.​வி.க.நகர் மண்​டலத்​தில் செயற் பொறி​யாளர் ஆர்​.சர​வணன், உதவி செயற்​பொறி​யாளர் டி.ர​விவரமன், உதவி பொறி​யாளர் டி.சரஸ்​வ​தி, வருவாய் பிரிவு இளநிலை உதவி​யாளர். மணி​கண்​டன் ஆகிய 4 பேர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

தேனாம்​பேட்டை மண்​டலத்​தில் கண்​காணிப்​பாளர் ஏ.ஸ்ரீரா​முலு, சுகா​தார ஆய்​வாளர் ஏ.மஞ்​சித் ஹுசைன், தூய்​மைப் ​பணி மேற்பார்​வை​யாளர் ஆர்​.கோ​தண்​டன் ஆகிய 3 பேர் சஸ்​பெண்ட் செய்யப்​பட்​டு எஃப்​ஐஆரும் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT