கோவையில் நேற்று நடைபெற்ற விழாவில், போட்டித் தேர்வுகளுக்கான ‘புவியியல்’ நூலை கவுமார மடாலயத்தின் ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் வெளியிட்டார். உடன் நூலாசிரியர் குமாரசாமி, ஓய்வுபெற்ற காவல்துறை துணைத் தலைவர் இரா.சின்னசாமி, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.எச்.சத்தீஷ் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

 
தமிழகம்

“புத்தகங்கள் வெறும் காகிதங்கள் அல்ல; அறிவாயுதங்கள்” - கோவையில் எழுத்தாளர் குமாரசாமி கருத்து

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ‘புவியியல்’ நூல் வெளியீடு

செய்திப்பிரிவு

கோவை: ‘புத்​தகங்​கள் வெறும் காகிதங்​களல்ல, அறி​வா​யுதங்​கள்’ என கோவை​யில் நடை​பெற்ற புவி​யியல் எனும் நூல் வெளி​யீட்டு விழா​வில் நூலாசிரியர் கி.கு​மார​சாமி தெரி​வித்​தார்.

போட்​டித் தேர்​வு​களுக்​கான ‘பு​வி​யியல்’ நூல் வெளி​யீட்டு விழா கோவை அரசு கலைக் கல்​லூரி​யில் நேற்று நடந்​தது. சென்னை வர்த்​த​மானன் பதிப்​பகத்​தின் ஸ்ரீவர்த்​த​மானன் வரவேற்​றார். முன்​னாள் மாணவர் சங்​கத்​தின் தலை​வர் க.ரத்​தின​சாமி, இணை நூலாசிரியர் இ.சி.​காம​ராஜ் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

கோவை கவு​மார மடால​யத்​தின் ஆதீனம் தவத்​திரு குமரகுருபர சுவாமிகள் நூலை வெளி​யிட, ஓய்​வு​பெற்ற காவல்​துறை அதிகாரி இரா.சின்​ன​சாமி, கோவை மண்டல பாஸ்​போர்ட் அலு​வலர் கே.எச்​.சத்​தீஷ், கோவை அரசு கல்​லூரி​யின் அரசி​யல் அறி​வியல் துறைத் தலை​வர் பி.க​னக​ராஜ் ஆகி யோர் பெற்​றுக் கொண்​டனர்.

நூலாசிரியரும், சென்னை முன்​னாள் கல்​லூரிக் கல்வி இயக்​குநரும், தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்​தின் முன்​னாள் உறுப்​பினரு​மான கி.கு​மார​சாமி அறி​முக உரை​யாற்​றும்​போது, “போட்​டித் தேர்​வு​களில் ஒன்​றிரண்டு தோல்வி​கள் வந்​தால் தேர்​வர்​கள் கவலைப்​படக் கூடாது. கற்​றல் என்​பது நீண்ட நெடிய பயணம். தன்​னம்​பிக்​கை, குறிக்​கோள் மற்​றும் திட்​டங்​கள் ஆகிய​வை​தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்​தி​ன. புத்​தகங்​கள் வெறும் காகிதங்​களல்ல, அறி​வா​யுதங்​கள்” என்​றார்.

தவத்​திரு குமரகுருபர சுவாமிகள் பேசும்​போது, “ஓய்​வுக்கு பின்​னரும், சமு​தா​யத்​துக்கு பயனுள்ள வகை​யில் வாழ வேண்​டும் என நினைத்​து, இந்த நூல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. பரு​வநிலை மாற்​றம் உலகை இயக்​கிக் கொண்​டிருக்​கிறது. ஐரோப்​பிய குளிர் நாடு​களில் வெப்​பநிலை மாற்​றம் பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்தி வரு​கிறது. அதி​கப்​படி​யான மின் உற்​பத்​தி, நிலக்​கரி எடுப்​பது என கடந்த 50-60 ஆண்​டு​களில் இந்த புவி அதிக மாற்​றத்தை சந்​தித்​துள்​ளது.

அமே​சான் காடு​கள் அழி​யத் தொடங்கி உள்​ளன. நம் புவி​யியலை சுற்றி நிகழும், சூழல் பாதிப்​பு​களை நாம் உணர வேண்​டும்” என்​றார். நிகழ்​வில் கல்​லூரி​யின் தேர்வு கட்​டுப்​பாட்​டுத் துறை ஆணை​யர் ஷீலா பிரியதர்​ஷினி உ்ள்பட பலர் பங்​கேற்​றனர். போட்​டித் தேர்​வு​களுக்கு தயா​ராகும் கல்​லூரி மாணவர்​களுக்​காக ரூ.900 மதிப்​பிலான புவி​யியல் நூலின் 2 பாகங்​களும் சேர்த்து சலுகை விலை​யில்​ ரூ.500-க்​கு வழங்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT