தமிழகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற அனு​மதி வழங்கி உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால உத்​தரவு பிறப்​பித்​துள்ள நிலை​யில், இதை எதிர்த்து தமிழக அரசு சார்​பில் சீராய்வு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்​கை​யைக் கண்​டித்​து, சென்னை புரசை​வாக்​கம் பகு​தி​யில் தமிழக பாஜக சார்​பில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

பாஜக மாநிலச் செய​லா​ளர் வினோஜ் பி.செல்​வம், மாவட்​டத் தலை​வர் கிரி உள்​ளிட்ட நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் திரளாகப் பங்​கேற்​று, கையில் அகல் விளக்​கு​களை ஏந்தி அரசுக்கு எதி​ராக கோஷமிட்​டனர்.

ஆர்ப்​பாட்​டத்​தில் பங்​கேற்​றவர்​கள் கூறிய​போது, “தமிழக அரசு சீராய்வு மனு தாக்​கல் செய்​திருப்​பது தவறு. உடனடி​யாக அந்த மனுவை திரும்​பப் பெற வேண்​டும். திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்​க வேண்​டும்​’’ என்​றனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT