கோப்புப்படம்

 
தமிழகம்

கூட்டணியில் 65 தொகு​தி​கள் கேட்கும் பாஜக, 25 தர திட்டமிடும் அதிமுக

ஆர்.ஷபிமுன்னா

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் 65 தொகு​தி​கள் கேட்​கும் பாஜக​வுக்கு 25 தொகு​தி​கள் கொடுத்து சமா​தானப்​படுத்த அதி​முக திட்​ட​மிடு​வ​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

கடந்த தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் பாஜக 20 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இதில் 4-ல் வெற்றி பெற்​றது. மீதம் உள்ள 16-ல் பாஜக​வுக்கு இரண்​டா​மிடம் கிடைத்​தது. அடுத்​து, மக்​கள​வைத் தேர்​தலில் அதி​முக வில​கிய நிலை​யில் பாஜக 23 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இதில் 12 தொகு​தி​களில் இரண்​டா​மிடம் பெற்ற கட்​சிக்​கு, சட்​டப்​பேரவை தொகுதி வாரி​யான வாக்​கு​களில் 59 தொகு​தி​களில் இரண்​டாவது, 64-ல் மூன்​றாவது இடம் கிடைத்​தது.

          

இவற்றை முன்​னிறுத்தி பாஜக​வின் தேசி​யத் தலைமை அதி​முக​விடம் 65 தொகு​தி​கள் கேட்​டுள்​ளது. இதற்கு வலு​வானக் காரண​மான தமி​ழ​கத்​தில் பாஜக வளர்ந்து வரு​வ​தாக கட்​சித் தலைமை குறிப்​பிட்​டுள்​ளது. உதா​ரண​மாக, சமீபத்​தில் பிரதமர் மோடி​யின் மது​ராந்​தகம் கூட்​டத்​துக்​கும் சுமார் 5 லட்​சம் பேர் வந்​த​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. இதில் பாஜக​வினர் மட்​டுமே சுமார் 3 லட்​சம் என்​பது தங்​கள் கட்​சி​யின் அபரிமித​மான வளர்ச்​சியை காட்​டு​வ​தாக தலைமை வாதிடு​கிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் தேசிய பாஜக வட்​டாரம் கூறுகை​யில், “மத்​திய அரசின் திட்​டங்​களுக்​கு தமிழ்​நாட்​டில் ஆதரவு கிடைக்​கிறது. முக்​கிய​மாக விவ​சா​யிகளுக்​கான, கிசான் சம்​மான் யோஜ​னா​வில் ரூ.6,000 நேரடி​யாக வங்​கிக் கணக்​கில் செலுத்​தப்​படு​வதற்கு முக்​கிய ஆதரவு உள்​ளது.

அதி​முக தரப்​பில் எங்​களுக்கு இது​வரை அதி​காரபூர்​வ​மாக பதில் அளிக்​கப்​பட​வில்​லை. எங்​களிடம் நட்​புரீ​தி​யாகப் பேசும் அதி​முக முக்​கி​யத் தலை​வர்​கள் மூலம் தகவல் பரி​மாறப்​படு​கிறது. இதில் கடந்த தேர்​தலை விட சற்று அதி​க​மாக 25 தொதி​களை ஒதுக்க அதி​முக விரும்​புவ​தாகக் தெரி​கிறது. ஆனால், குறைந்​தது 35 முதல் 45 வரை அளிக்க அதி​முக​விடம் பாஜக வலி​யுறுத்​துகிறது. இதற்கு கடந்த தேர்​தலில் பாஜக நியமித்த வாக்​குச்​சாவடி முகவர்​கள் (பிஎல்ஏ) எண்​ணிக்​கையை நாங்​கள் சுட்​டிக் காட்​டி​யுள்​ளோம்” என்று தெரி​வித்​தனர்.

தேர்​தல் ஆணை​யப் புள்​ளி​விவரப்​படி கடந்த மக்​கள​வைத் தேர்​தலில் திமுக, திமுக சார்​பில் அனைத்து வாக்​குச் சாவடிகளி​லும் பிஎல்​ஏக்​கள் நியமிகப்​பட்​டனர். பிற கட்​சிகளில் பாஜக மட்​டுமே மிக அதி​க​மாக 61,438 பிஎல்​ஏக்​களை நியமித்​திருந்​தது. தேமு​திக 36,338, காங்​கிரஸ் 30,419 மற்​றும் பிற கட்​சிகள் மிகக் குறை​வாகவே பிஎல்​ஏக்​களை நியமித்​திருந்​தன.

வரவிருக்​கும் தமிழக தேர்​தலில் மாநில பாஜக​வின் பிரபல மற்​றும் முக்​கி​யத் தலை​வர்​கள் அனை​வரை​யும் களமிறக்க தலைமை முடிவு செய்​துள்​ளது. நீளும் இப்​பட்​டியலில் முன்​னாள் ஆளுநர் தமி​ழிசை சவுந்​தர​ராஜன், முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை உள்​ளனர். நயி​னார் நாகேந்​திரன், வானதி ஸ்ரீனி​வாசன் உள்​ளிட்ட 4 எம்​எல்​ஏக்​கள் மீண்​டும் போட்​டி​யிடு​கின்​ற​னர்.

இவர்​களு​டன் பிற பிரபலங்​களான பொதுச்​செய​லா​ளர் ராமஸ்ரீநி​வாசன், மாநிலச் செய​லா​ளர் வினோஜ் செல்​வம், செய்​தித் தொடர்​பாளர் நாராயணன் திருப்​ப​தி, ஆன்​மிகப் பிரி​வின் தலை​வர் எம்​.​நாச்​சி​யப்​பன் ஆகி​யோர் இடம் பெற்​றுள்​ளனர்.

எஸ்​.ஜி.சூர்​யா, குஷ்பு, பொன்​னார், கே.டி.​ராகவன் உள்​ளிட்​டோரும் இப்​பட்​டியலில் இடம் பெற்​றுள்​ளனர். இவர்​களை தவிர கல்​வி​யாளர்​கள், தமி​ழறிஞர்​கள், ஓய்​வு​பெற்ற அதி​காரி​கள் என சில பிரபலங்​களை​யும் களமிறக்க பாஜக திட்​டமிட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT