மாநிலங்களவை எம்பி செல்வ கணபதி உறுதி

 
தமிழகம்

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்” - பாஜக மாநிலங்களவை எம்பி செல்வ கணபதி உறுதி

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “புதுச்சேரிக்கு நிச்சயம் மாநில அந்தஸ்து கிடைக்கும்” என பாஜக மாநிலங்களவை எம்.பி செல்வ கணபதி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்காளர் திருத்த பணிக்கு பின்னர் கேரளா, தெலங்கானா, கர்நாடகம் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இங்கெல்லாம் வாக்கு திருட்டு நடக்கவில்லையா? ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைக்கிறது. மாணவர்களை இந்த போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர். அயல்நாட்டு தீவிரவாதிகள் பணம் கொடுத்து போராட்டத்தை துாண்டுகின்றனர்.

மாணவர்களுக்கு உரிய விளக்கம் அளித்ததால் போராடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2014 முதல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸுக்கு பதவி ஆசையால் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்காக தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி எந்த குறையும் இல்லாமல் நடக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விரும்பி, மீண்டும் திருத்தப் பணியை செய்து வருகிறது.

வரும் தேர்தலிலும் பாஜக சிறப்பான வெற்றியை பெறும். வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி குறித்து பாஜக சார்பில் பேரணி வரும் அக்.31-ல் புதுச்சேரியில் நடத்தப்படவுள்ளது. மாநிலங்களவையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்காக 3 முறை பேசியுள்ளேன்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான சூழ்நிலையும் இருக்கிறது. தகுந்த நேரம் வந்த பிறகு புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்” என்று எம்.பி செல்வ கணபதி கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT