தமிழகம்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை; சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: பாஜக தேசிய செயலாளர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘கர்​நாடக வனத்​துறை​யின​ரால் 3 தமிழர்​கள் படு​கொலை செய்​யப்​பட்ட வழக்கை சிபிஐ விசா​ரிக்க வேண்​டும்’ என பாஜக தேசிய செய​லா​ளர் ம.வெங்​கடேசன் வலி​யுறுத்தி உள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கர்​நாடக மாநிலம், சாம்​ராஜ்நகர் மாவட்​டம், ஹானூர் வனப் பகு​தி​யில், கடந்த 15-ம் தேதி 3 தமிழர்​கள் அம்​மாநில வனத்​துறை​யின​ரால் சுட்​டுப் படு​கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்​தின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்​போது வெளி​யாகி​யுள்​ளது.

அதில், 3 பேரின் உடல்​களில் காயங்​கள் இருந்​த​தாக​வும், 10 அடிக்​கும் குறை​வான நெருக்​கத்​தில் நின்று ‘பம்ப் ஆக் ஷன் ஷாட் கன்’ மூலம் அவர்​கள் சுடப்​பட்​டுள்​ள​தாக​வும் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது அதிர்ச்​சி​யளிக்​கிறது.

கர்​நாடக வனத்​துறை​யின​ரால் நிகழ்த்​தப்​பட்ட இந்​தப் படு​கொலை​யில் மர்​மம் இருப்​ப​தாக, சம்​பவம் நடந்​த​போதே தமிழக பாஜக பல கேள்வி​களை எழுப்​பி​யிருந்த நிலை​யில், தற்​போது வந்​துள்ள பிரேதப் பரிசோதனை அறிக்​கை​யும் இது ஒரு போலி என்​க​வுன்ட்​டர் என்​பதை வெட்ட வெளிச்​ச​மாக்​கி​யுள்​ளது.

கர்​நாடக அரசு கூறு​வதைப்​போல படு​கொலை செய்​யப்​பட்ட 3 பேரும் சட்​டத்​துக்கு புறம்​பான செயல்​களில் ஈடு​பட்​டிருந்​த​தாக ஒரு வாதத்​துக்கு வைத்​துக் கொண்​டாலும்​கூட, அவர்​களைக் கைது செய்து நீதி​மன்​றத்​தில்​தான் ஆஜர்​படுத்​தி​யிருக்க வேண்​டும்.

அதை விட்​டு​விட்டு போலி என்​ க​வுன்ட்​டர் செய்​தது மனித உரிமை மீறல். இதுகுறித்து சிபிஐ விசா​ரணை நடத்​தப்​படு​வதை தவெக அரசு உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT