மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்.  | படம்: நா.தங்கரத்தினம் |

 
தமிழகம்

மீனாட்சி அம்மன் கோயிலில் பாஜக தேசிய தலைவர் வழிபாடு

செய்திப்பிரிவு

மதுரை: தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக மதுரை வந்துள்ள பாஜக தேசியத் தலை​வர் நிதின் நபின், மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயி​லில் நேற்று சுவாமி தரிசனம் செய்​தார்.

பின்​னர், அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மீனாட்​சி​யம்​மனை​யும், சிவபெரு​மானை​யும் வழிபட்டு வந்​துள்​ளேன்.

          

இந்த தரிசனம் வலிமை​யை​யும், ஆற்​றலை​யும் தரு​கிறது. நாட்​டில் அனைத்து மக்​களை​யும் ஆசீர்​வ​திக்க வேண்​டிக் கொண்​டேன்.

சனாதனிகளுக்கு சக்தி கிடைக்​கட்​டும். மீனாட்​சி​யம்​மன் கோயி​லின் வரலாறும் எவ்​வளவு பழமை​யானதோ, அதே​போல, ஆன்​மிகத்தை முன்​னெடுத்​துச் செல்​லத் தூண்​டும் பல விஷ​யங்​கள் நாட்​டின் வரலாற்​றில் இடம் பெற்​றிருப்​பதை நினைத்து நாம் பெரு​மைப்பட வேண்​டும்.

கோயில்​கள் விஷ​யத்​தில் தமிழக அரசு நடந்​து​கொள்​ளும் விதம் அரசி​யலுக்​காக அரசு எப்​படி நடந்து கொள்​கிறது என்​ப​தைக் காட்​டு​கிறது.

இந்​தி​யப் பண்​பாட்டை அவம​தித்​தும், அதற்கு கீழ்ப்​படி​யாமலும் இருக்​கிறார்​கள். இவ்​வாறுஅவர் கூறி​னார். பாஜக மேலிடப்பொறுப்​பாளர் அரவிந்த்​மேனன் மற்​றும் நிர்​வாகி​கள் உடன் இருந்​தனர்.

SCROLL FOR NEXT