தமிழகம்

தமிழகத்தை ஊழல் மாநிலமாக்கிய திமுக அரசு: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: வளர்ச்​சி​யைப் பற்றி கவலைப்​ப​டா​மல் ஊழலில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு மாற்றியுள்ளதாக பாஜக தேசிய தலை​வர் நிதின் நபின் குற்றம்சாட்டியுள்ளார்.

ராம​நாத​புரத்​தில் பாஜக வேட்​பாளர் ஜிபிஎஸ்​கே. நாகேந்​திரனை ஆதரித்து அரண்​மனை அருகே நடை​பெற்ற ​கூட்​டத்​தில் நிதின் நபின் பேசி​ய​தாவது: திமுக, காங்​கிரஸ் ஊழல் செய்து தொடர்ந்து தமிழகத்தை ஏழ்மை நிலைக்​குக் கொண்டு செல்​கிறது.

          

தமிழகத்​தில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் ஆட்சி அமைந்​ததும் போதை கலாச்​சா​ரம் அடியோடு ஒழிக்​கப்​படும். அளவுக்​க​தி​மாக சைபர் குற்​றங்கள் நடக்​கின்​றன. ஐஎஸ்ஐ மூலம் தீவிர​வாத​ம் வளர்க்​கப்​படுகிறது.

உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனு​ம​திக்​க​வில்​லை. திமுக அரசு வளர்ச்​சி​யைப் பற்றி கவலைப்​படவில்லை. ஊழலில் நம்​பர் ஒன் மாநில​மாக மாற்​றிக் கொண்​டிருக்​கிறது.

கருணாநிதி, ஸ்டா​லின் என ஒரு குடும்​பத்​துக்​காக மட்​டும் இந்த அரசு பாடு​பட்​டுக்கொண்​டிருக்​கிறது. இந்த குடும்ப ஆட்​சியை ஒழிக்க வேண்​டும். காசியை போல் ராமேசுவரத்​துக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​படும். ஜல்​ஜீவன் திட்​டத்தில் முறை​கேடு செய்​துள்​ளனர்.

ஈரானில் தவித்த ராம​நாத​புரம் மாவட்ட மீனவர்​கள் உள்ளிட்ட 700-க்​கும் மேற்​பட்ட இந்​திய மீனவர்​களை பிரதமர் மீட்டுள்ளார்.

பெண்​கள், விவ​சா​யிகள், மீனவர்​கள் என அனைத்​துத் தரப்பினருக்​கான அரசு அமைய தேசிய ஜனநாயகக் கூட்​டணிக்கு வாக்​களி​யுங்​கள். இவ்வாறு பேசி​னார்.

கூட்​டத்​தில் முன்​னாள் அமைச்​சர் மணி​கண்​டன், நடிகர் சரத்​கு​மார், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்​டி, மாவட்ட தலைவர் முரளிதரன், வேட்​பாளர் ஜிபிஎஸ்​.கே.நாகேந்​திரன் உள்​ளிட்​டோர் பேசினர்.

SCROLL FOR NEXT