தமிழிசை

 
தமிழகம்

‘விஜய்யின் நியாயமான கேள்விகளும், விளையாட்டான பேச்சும்...’ - தமிழிசை கருத்து

தமிழினி

சென்னை: “விஜய் சில கேள்விகளை நியாயமாக கேட்டிருக்கிறார். ஆகவே, இந்த நியாயமான கேள்விகளை மட்டும் தமிழக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்” என மூத்த பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “விஜய் சில கேள்விகளை நியாமாக கேட்டிருக்கிறார். மாநில அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என தெரிந்தும், நீட் விலக்கு என சொன்னீர்களே, கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் கொடுப்பதாக சொன்னீர்களே, 4,000 ரூபாய்க்கு மேல் கரும்புக்கு கூடுதல் விலை கொடுப்பதாக சொன்னீர்களே என திமுகவிடம் நியாயமான கேள்விகளை எழுப்பியிருந்தார்.

          

ஆகவே, இந்த நியாயமான கேள்விகளை மட்டும் தமிழக மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். டெல்லி அணி, சென்னை அணி என விளையாட்டாக சொல்வதை விளையாட்டாக விட்டுவிட வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

திமுக தோற்கடிக்கப்பட வேண்டிய ஒரு கட்சி. யாராவது அறிவாலயம் பக்கத்தில் நிழலுக்கு ஒதுங்கினால் கூட அவர்களை கூட்டணியில் சேர்த்து கொள்கிறார்கள். இந்த நிலைமையில் தான் திமுக இருக்கிறது. அவர்கள் பதற்றத்தோடு இருக்கிறார்கள்.

நான் கடுமையாக உழைப்பதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். உழைத்து ஆட்சியை மகனுக்கு கொடுக்கப் போகிறீர்கள். அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதெல்லாம் நடக்காது என்பதை நாங்கள் சொல்லிக் கொள்கிறோம். மக்களுக்கான ஆட்சியாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி வெற்றிபெறும்” என்றார் தமிழிசை.

SCROLL FOR NEXT