தமிழகம்

வந்தே மாதரம் பாடல் அவமதிப்பு: பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வின் போது, ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்​கப்​பட்​டது.

அப்​போது சோனியா காந்தி அந்​தப் பாடலுக்கு உரிய மரி​யாதை அளிக்​காமல் அவமரி​யாதை செய்​த​தாகப் பெரும் சர்ச்சை எழுந்​தது. இதற்கு பாஜக​வின் தேசி​யத் தலை​வர்​கள் பலரும் கடும் கண்​டனம் தெரி​வித்து வரு​கின்​றனர்.

இந்​தச் சம்​பவத்​தைக் கண்​டித்​து, தமிழக மாநில பாஜக இளைஞரணி சார்​பில் சென்னை அண்ணா சாலை​யில் நேற்று மாலை கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

இந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு இளைஞரணி மாநிலத் தலை​வர் எஸ்​.ஜி. சூர்யா தலைமை தாங்​கி​னார். ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட பாஜக​வினர், கைகளில் மெழுகு​வர்த்​தி​களை ஏந்தி காங்​கிரஸ் கட்சிக்கு எதி​ராக​வும், சோனியா காந்​தி​யின் செயலைக் கண்​டித்​தும் கோஷங்​களை எழுப்​பினர்.

SCROLL FOR NEXT