தமிழகம்

கேசவ விநாயகன் கவனித்து வந்த பணிகளை ஒருங்கிணைக்க பாஜகவில் 3 பேர் குழு

செய்திப்பிரிவு

சென்னை: கேசவ விநாயகன் கவனித்து வந்த பணி​களை ஒருங்​கிணைக்க பாஜகவில் 3 பேர் குழுவை மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் அறி​வித்​துள்​ளார்.

கடந்த 9-ம் தேதி சென்​னை​யில் நடை​பெற்ற ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் முக்​கிய ஆலோ​சனைக் கூட்​டத்​தில், தமிழக பாஜக அமைப்பு பொதுச் செய​லா​ள​ராக இருந்த கேசவ விநாயகத்​தை, அந்​தப் பொறுப்​பிலிருந்து விடுவிக்க முடிவு செய்​யப்​பட்​டது.

          

ஆர்​எஸ்​எஸ் இயக்​கத்​தில் அவருக்​குப் புதிய பொறுப்பு வழங்​கத் தீர்​மானிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, கடந்த 10-ம் தேதி அவர் முறைப்​படி விடுவிக்​கப்​பட்​டார். தற்​போது அவர் ஆர்​எஸ்​எஸ்​-ன் மாநில செயற்​குழு உறுப்​பின​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​நிலை​யில், கேசவ விநாயகத்​துக்​குப் பதிலாக, ஆர்​எஸ்​எஸ்-ஐ சேர்ந்த பிரசோப குமார் புதிய அமைப்பு பொதுச் செய​லா​ள​ராக நியமிக்​கப்பட வாய்ப்​புள்​ள​தாகக் கட்சி வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இதற்​கிடை​யில், புதிய அமைப்பு பொதுச் செய​லா​ளர் பொறுப்​பேற்​கும் வரை, கட்​சி​யின் அன்​றாடப் பணி​களை​யும், தேர்​தல் முன்​னேற்​பாடு​களை​யும் ஒருங்​கிணைக்க 3 பேர் கொண்ட குழுவை நயி​னார் நாகேந்​திரன் அமைத்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், “சட்​டப்​பேரவை தேர்​தல் பணி​களை கருத்​தில் கொண்​டு, கமலால​யத்​தில் அன்​றாடப் பணி​களை ஒருங்​கிணைத்து செயல்​படுத்​தும் வகை​யில் மாநிலப் பொருளாளர் எஸ்​.ஆர்​.சேகர், மாநில துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன், மாநில செயற்​குழு உறுப்​பினர் சாய் சத்​யன் ஆகியோர் கொண்ட 3 பேர் கொண்​ட குழு அமைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT