தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப்படம் 
தமிழகம்

தமிழிசை தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு

செய்திப்பிரிவு

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கான குழுவை நியமித்து வருகின்றன. அந்தவகையில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை தயாரிக்க, அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குழு அமைத்துள்ளார். அதன்படி கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவின் முக்கிய உறுப்பினர்களாக மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், பி.கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் இராம ஸ்ரீநிவாசன், கார்த்தியாயினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் சி.நரசிம்மன், ராஜலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

விவசாயிகள் அணி மற்றும் இளைஞர் அணியின் பிரதிநிதிகளாக ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் ஆர்.ஆதித்யா சேதுபதி, தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாநில அமைப்பாளர் ஆர்.அர்ஜுனமூர்த்தி ஆகியோரும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான மக்கள் நலன் சார்ந்த முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையைத் தயார் செய்யும் பணிகளை இந்த குழு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT