சென்னை: பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் நலப் பணிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், டிச. 1-ம் தேதி முதல் 25 நாட்கள் சேவைப் பணி இயக்கத்தை பாஜக நடத்துகிறது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் டிச.1 முதல் 25-ம் தேதி வரை சேவைப் பணி இயக்கம் நடத்தப்பட உள்ளது.
இதில் சேவைத் தூதர்களாகப் பணியாற்ற விருப்ப முள்ளவர்கள் தொகுதிகளில் தங்கி முழு நேரப் பணியாளர்களாக சேவையாற்றுவர்.
இதை ஒருங்கிணைக்க மாநிலச் செயலாளர் கதலி நரசிங்கப்பெருமாள், பெருங் கோட்ட அமைப்புச் செயலாளர்கள் பாலகுமார், கிருஷ்ணகுமார், பேட்டை சிவா, ஓபிசி அணி முன்னாள் மாநிலப் பொதுச்செயலர் ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.