சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அக்.11-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்.
பின்னர், சென்னை ஐஐடி வளாகத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு நடைபெறும் அரசு விழாவில், வேலூர் புதிய விமான நிலையம் மற்றும் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். ஐஐடி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
சென்னை வரும் பிரதமருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. போரூரில் இருந்து ஐஐடி வளாகம் வரை பிரதமர் செல்லும் வழியெங்கும் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.