தமிழகம்

பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை: அடை​யாறு பகுதியில் சமீபத்​தில் இறந்த காகங்​களை மத்​திய கால்​நடை ஆராய்ச்சி நிறு​வனம் ஆய்வு செய்​த​தில், எச்​5என்1 எனப்​படும் பறவை காய்ச்​சல் பாதிப்பு இருந்​தது உறு​தி​யானது.

இதையடுத்​து, கண்​காணிப்பை தீவிரப்​படுத்​து​மாறு தமிழக தலைமை செயலருக்கு மத்​திய அரசு அறி​வுறுத்​தி​யது. அதன்​படி, தமிழக சுகா​தா​ரத்​துறை பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது.

          

பறவை காய்ச்​சலுக்​குள்​ளான கோழிகள், பிற பறவை​யினங்​களிடம் இருந்து மனிதர்​களுக்கு தொற்று பரவ வாய்ப்​புள்​ளது. அதன் கழி​வு​களில் இருந்து மனிதர்​களுக்​கும் எளி​தில் பாதிப்பு பரவக்​கூடும்.

பாதிக்​கப்​பட்ட பறவை​யிடம் இருந்​தோ, மனிதரிடம் இருந்தோ மற்​றவர்​களுக்​கு, `வெஸ்ட் நைல் வைரஸ்' பாதிப்பை கொசுக்​கள் கடத்​தும் என்​ப​தால், நோய்ப் பரவல் வாய்ப்பு அதி​கம் உள்​ளது.

அதனால், காய்ச்​சல், தலை​வலி, தசைப்​பிடிப்​பு, இரு​மல், மூச்சு திணறல் போன்​றவை ஏற்​பட்​டால் உடனடி​யாக மருத்​து​வரை அணுகி சிகி​ச்சை பெறு​மாறு பொது சுகா​தா​ரத்துறை தெரி​வித்​திருந்​தது.

இதற்​கிடை​யில், சென்​னையை தொடர்ந்​து, திரு​வள்​ளூர், திரு​வண்​ணா​மலை, கடலூர் உள்​ளிட்ட பல மாவட்​டங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் காகங்​கள் உயி​ரிழந்​தன. கிண்டி உயி​ரியல் பூங்​கா​வில் பறவை​கள் உயி​ரிழந்​த​தால், பூங்கா மூடப்​பட்​டது.

இது தொடர்​பாக தமிழக பொது சுகா​தா​ரத்​ துறை அதி​காரி​கள் கூறுகை​யில், ``தமிழகத்​தில் பறவை காய்ச்​சலால் காகங்​கள் உயி​ரிழந்​தா​லும், மற்ற பறவை​களுக்​கோ, மனிதர்​களுக்கோ பாதிப்பு கண்​டறியப்​பட​வில்​லை. காகங்​கள் உயி​ரிழப்​பது தொடர்ந்து வரு​வ​தால், பொது​மக்​கள் எச்​சரிக்​கை​யுடன் இருக்க வேண்​டும்.

இறந்த பறவை​களை வெறும் கைகளால் அப்​புறப்​படுத்​தக்​கூ​டாது. அறிகுறிகள் இருந்​தால், அலட்​சி​ய​மாக இல்​லாமல் உடனே மருத்​து​வரை அணுக வேண்​டும். பறவை காய்ச்​சலால் கோழிகள் பாதிக்​கப்பட அதிக வாய்ப்​புள்​ளது.

கோழி இறைச்​சியை நன்கு வேக வைத்து சாப்​பிட வேண்​டும். தமிழகம் முழு​வதும் நோய் தடுப்பு நடவடிக்​கைகளை சுகா​தா​ரத் ​துறை எடுத்து வரு​கிறது. பொதுமக்​கள்​ அச்​சமடைய வேண்​டாம்​” என்​றனர்​.

SCROLL FOR NEXT