தமிழகம்

வாசிப்பு பழக்கத்தை மீட்டெடுக்க பள்ளிதோறும் ‘வாசகர் வட்டம்’ - தமிழக அரசுக்கு பபாசி கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தென்​னிந்​தி​யப் புத்​தக விற்​பனையாளர்​கள் மற்​றும் பதிப்​பாளர்​கள் சங்​கத் தலை​வர் ஆர்.எஸ்.சண்​முகம் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யாவில் தற்​போது ரூ.1.08 லட்​சம் கோடிக்கு புத்​தகங்​கள் விற்​பனையாகின்​றன.

இதில் அச்சு புத்​தகங்​கள் ரூ.95,816 கோடிக்​கும், டிஜிட்​டல் பதிப்பு ரூ.7,048 கோடிக்​கும், ஆய்​வுசார் இதழ்​கள் ரூ.5,150 கோடிக்​கும் விற்​பனையாகின்​றன. இது 2031-ம் ஆண்​டில் ரூ.2 லட்​சம் கோடி​யாக உயரும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இருப்​பினும், குறைந்த விலை, அதிக தள்​ளு​படி, வாசகர்​களின் மாறிவரும் பழக்​கவழக்​கங்​களால் இந்​திய பதிப்​புத் துறை கடும் நெருக்​கடியையும் சவால்​களை​யும் சந்​தித்து வரு​கிறது.

அதிலும் இன்​றைய இளம் தலைமுறை​யினரிடையே வாசிப்பு பழக்​கத்தை மீட்​டெடுப்​பது மிகப்​பெரிய சவாலாக உள்​ளது. எனவே, பள்​ளி​களில் முன்பு இருந்​தது போல தினசரி ஒரு பாட​வேளையை பொது புத்​தகங்​கள் வாசிப்​ப​தற்​கென ஒதுக்க வேண்​டும்.

ஒவ்​வொரு பள்​ளி​யிலும் ‘வாசகர் வட்​டம்’ தொடங்​கப்​பட வேண்​டும் என்​பதை அரசிடம் கோரிக்​கை​யாக வைக்​கிறோம். மேலும், 12,500 ஊராட்​சிகளில் தொடங்​கப்​பட்ட அண்ணா மறுமலர்ச்சி நூல​கங்​களுக்கு போதிய நூல​கர்​கள் இல்​லாததால் அவை முடங்​கி​யுள்​ளன.

அவற்​றைச் சீரமைத்து முழு​மையாக செயல்​படுத்த வேண்​டும். அரசு புத்​தகக் கொள்​முதலில், கணி​னி​யில் வெறும் 25 பக்​கங்​களை மட்​டும் பார்த்து தேர்வு செய்​யும் முறையை மாற்றி, முன்​புபோல் ஆசி​ரியர்​கள், வல்​லுநர்​களை கொண்டு புத்​தகத்தை முழு​மையாக படித்து தேர்வு செய்​யும் முறையை கொண்டு வர வேண்​டும்.

அதேபோல் பதிப்​பாளர்​களிடம் ஆர்​டர்​களின்​போது 2.5 சதவீத தொகை பிடித்​தம் செய்​யப்​படுவதை நிறுத்த வேண்​டும். சென்னை புத்​தகக் காட்சி வரும் ஜனவரி மாதம் 7-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.

தமிழக அரசின் சார்​பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி உரு​வாக்​கப்​படும் போலி புத்​தகங்​கள் புத்​தகக் காட்​சிக்​குள் ஊடுரு​வாமல் தடுக்க இந்த ஆண்டு கூடுதல் விழிப்​புணர்​வுடன் நட​வடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறினார்.

இந்​நிகழ்​வில் பபாசி பொருளாளர் வெங்​கடாசலம், இணைச் செய​லா​ளர் நந்​தன் மாசிலாமணி, செயற்​குழு உறுப்​பினர்​கள் முத்​துசாமி, பாலாஜி உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT