தமிழகம்

5 நாட்கள் வேலை உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம்

தமிழகத்தில் 70,000 ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: ​பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

வாரத்​தில் 5 நாட்​களுக்கு வேலை திட்​டத்தை அமல்​படுத்​து​வது, அனைத்து ஊழியர்​களுக்​கும் விகி​தாச்​சார அடிப்​படை​யில் பிஎல்ஐ (லாபத்​தின் அடிப்​படை​யில் இணைப்பு ஊக்​கத்​தொகை) சமமாக வழங்​கு​வது உள்​ளிட்ட கோரிக்​கை​களை வலி​யுறுத்தி வங்கி சங்​கங்​களின் கூட்​டமைப்​பும், இந்த கோரிக்​கை​களு​டன் ஐடிபிஐ வங்​கியை தனி​யார்​மய​மாக்​கும் முயற்​சி​யைக் கைவிடு​வது ஆகிய 3 கோரிக்​கை​களை வலி​யுறுத்​தி, அகில இந்​திய வங்கி அதி​காரி​கள் சங்​க​மும் நாடு தழு​விய அளவில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை வேலைநிறுத்​தத்​தில் ஈடுபட உள்​ளன.

இதுகுறித்​து, இந்​திய வங்கி ஊழியர்​ சம்மேளனத்​தின் தமி​ழ​கப் பிரிவு துணைத் தலை​வர் சி.பி.கிருஷ்ணன் கூறிய​தாவது: கோரிக்​கை​கள் தொடர்​பாகக் கடந்த 22-ம் தேதி நடந்த முத்​தரப்பு பேச்​சு​வார்த்தையில் சுமுகத் தீர்​வு எட்​டப்​பட​வில்​லை.

எனவே, திட்​ட​மிட்​டபடி திங்​கள் ​கிழமை (செப்​.28) முதல் புதன்​கிழமை (செப்​.30) வரை நாடு தழு​விய வேலை நிறுத்​தம் நடை​பெறவுள்​ளது. நாடு முழு​வதும் 9 லட்​சம் ஊழியர்​கள், அதி​காரி​கள் இதில் பங்​கேற்க உள்​ளனர். 60 ஆயிரம் தனி​யார் வங்​கி​களின் ஊழியர்​கள், ஒரு லட்​சம் கிரா​மப்​புற வங்கி ஊழியர்​கள், அதி​காரி​கள் பங்​கேற்க உள்​ளனர். தமி​ழ​கத்​தில் 70 ஆயிரம் வங்கி ஊழியர்​கள், அதி​காரி​கள் பங்​கேற்க உள்​ளனர்.

ஏடிஎம் பணம் லோடு மேற்​கொள்​வதை வெளிநபர்​களிடம் கொடுத்​து​விட்​டனர். இது​போல நிறைய பிரச்​சினை​கள் உள்​ளன. தனி​யார் மயமாக்​கு​வதை நிறுத்த வலி​யுறுத்​துகி​றோம். தற்​காலிகப் பணி​யாளர்​களை நிரந்​தரம் செய்​ய​வும், காலி பணி​யிடங்​களை நிரப்​ப​வும் வலி​யுறுத்தி உள்​ளோம். இவ்​வாறு சி.பி.கிருஷ்ணன் கூறி​னார்.

வேலை நிறுத்​தத்​தால், வங்கிகளில் பணம் செலுத்​து​வது, பெறு​வது போன்ற சேவை​கள் மேற்​கொள்ள முடி​யாது. காசோலை பரி​வர்த்​தனை பாதிக்​கும். வங்கி கடன் வாங்​கு​வது தொடர்​பாக சேவை இருக்​காது. அதே​நேரத்​தில், ஏடிஎம் மையத்​தில் பணம் எடுக்​கலாம். நெட் பேங்​கிங், யுபிஐ, மொபைல் பேங்​கிங் செயல்​படும் என்று வங்கி ஊழியர்​ சம்மேளன நிர்​வாகிகள் தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT