கோப்புப்படம்

 
தமிழகம்

கொடைக்கானல் மலைச்சாலையில் 12 மீட்டர் நீள வாகனங்களுக்கு தடை

செய்திப்பிரிவு

பழநி: கொடைக்கானல் மலைச்சாலையில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல டிசம்பர் 1-ம் தேதி முதல் மீண்டும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் துர்கா உத்தரவிட்டுள்ளார்.

‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் வரும் அளவுக்கு அதிகமான வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, உயர் நீதிமன்ற உத்தரவின்படி ‘இ-பாஸ்’ முறை அமலில் உள்ளது.

இருந்தும், நீளமான பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் கொடைக்கானல் செல்லும் சாலைகளில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

எனவே, 12 மீட்டருக்கு குறைவான நீளமுள்ள வாகனங்களை சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் பயன்படுத்த வேண்டும் என திண்டுக்கல் ஆட்சியர் துர்கா உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, இந்த தடை உத்தரவு கடந்த 2024 நவ.18-ம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில் யாரும் முறையாக கடைபிடிக்காததால் தற்போது மீண்டும் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT