தமிழகம்

பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை

செய்திப்பிரிவு

சென்னை: புதுச்​சேரி சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி பிரச்​சா​ரம் மேற்​கொள்ள பிரதமர் நரேந்​திர மோடி நாளை (மார்ச் 3-ம் தேதி) புதுச்​சேரி செல்​கிறார்.

அங்கு பிரச்​சா​ரத்தை முடித்து விட்டு சென்னை திரும்​பும் அவர் அன்று இரவு, சென்னை கிண்​டி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர ஓட்​டலில் தங்​கு​கிறார்.

          

மறு​நாள் காலை தமிழக பாஜக நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்​துகிறார். பின்​னர், மதி​யம் புறப்​பட்டு கேரளா செல்​கிறார்.

இதையொட்டி பாது​காப்பு காரணங்​களுக்​காக மீனம்​ பாக்​கம், கிண்டி ஆகிய பகு​தி​கள், பிரதமர் பயணிக்​கும் வழித்​தடங்​கள் “சிவப்பு மண்​டல​மாக” அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், அரசு ஏற்​பாடு​களை தவிர 3 மற்​றும் 4 ஆகிய 2 நாட்​களும் இந்த பகு​தி​யில் ட்ரோன் கேம​ராக்​கள் மற்​றும் ஆளில்லா வான்​வழி கருவி​கள் பறக்க விடு​வதற்​கும் தடை விதிக்​கப்​படு​கிறது என சென்னை காவல் ஆணை​யர் அருண் தெரி​வித்​துள்​ளார். பாது​காப்பு பணி​யில் 3 ஆயிரம் போலீ​ஸார்​ ஈடு​பட்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT