தமிழகம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய ஒரு கிமீ சுற்றளவுக்கு கட்டுமானங்களுக்கு தடை: பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து கிரெடாய் வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை ஒட்​டிய ஒரு கி.மீ. சுற்​றளவுக்கு எந்த கட்​டு​மானங்​களுக்​கும் அனு​மதி வழங்​கக்​கூ​டாது என்ற பசுமை தீர்ப்​பாய உத்​தரவை எதிர்த்து கிரெ​டாய் சார்​பில் தொடரப்​பட்​டுள்ள வழக்​கின் இறுதி விசா​ரணையை உயர் நீதி​மன்​றம் ஆக.3-க்கு தள்ளி வைத்​துள்​ளது.

சென்னை பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை ஒட்​டிய ஒரு கி.மீ. சுற்​றளவுக்கு எந்த கட்​டு​மானங்​களுக்​கும் அனு​மதி வழங்​கக்​கூ​டாது என தென் மண்டல பசுமை தீர்ப்​பா​யம் கடந்​தாண்டு செப்​டம்​பரில் உத்​தர​விட்​டிருந்​தது.

இந்த உத்​தர​வின் அடிப்​படை​யில் பள்​ளிக்​கரணையை சுற்​றி​லும் ஒரு கி.மீ. சுற்​றளவுக்கு எந்த கட்​டு​மானங்​களுக்​கும் அனு​மதி வழங்​கக்​கூ​டாது என தடை விதித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு​மம் கடந்​தாண்டு அக்​டோபரி்ல் உத்​தர​விட்​டது.

பசுமை தீர்ப்​பா​யம் மற்​றும் சென்னை பெருநகர வளர்ச்​சிக்​ குழு​மம் பிறப்​பித்த உத்​தர​வு​களை எதிர்த்து இந்​திய ரியல் எஸ்​டேட் மேம்​பாட்​டாளர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பான கிரெ​டாய் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டிருந்​தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

வரைவு அறிக்​கை

அப்​போது கிரெ​டாய் தரப்​பில், ‘‘பள்​ளிக்​கரணை சதுப்பு நிலப்​பகு​தி​யைச் சுற்றி சுமார் ஒரு கி.மீ. சுற்​றளவுக்கு மெட்ரோ ரயில் மற்​றும் 36 கல்​லூரி​கள், 11 மருத்​து​வ​மனை​கள், ஏராள​மான ஐடி நிறு​வனங்​கள் உள்​ளிட்​டவை செயல்​பட்டு வரு​கின்​றன; அறி​வியல் பூர்​வ​மாக எந்​தவொரு களஆய்​வும் நடத்​தாமல் ஒரு தனி​யார் அறக்​கட்​டளை அளித்த வரைவு அறிக்​கை​யின் அடிப்​படை​யில் பசுமை தீர்ப்​பா​யம் இந்த உத்​தரவை பிறப்​பித்​துள்​ளது.

பசுமை தீர்ப்​பா​யத்​தின் இந்த உத்​தரவு காரண​மாக அப்​பகுதி நில உரிமை​யாளர்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். எனவே பசுமை தீர்ப்​பா​யம் மற்​றும் சிஎம்​டிஏ பிறப்​பித்​துள்ள உத்​தர​வு​களை ரத்து செய்​து​விட்டு அறி​வியல் பூர்​வ​மாக ஆய்வு நடத்​தி, பள்​ளிக்​கரணை பகு​தி​யில் கட்​டு​மானங்​களுக்கு தடை விதிக்​கும் பரப்பை மறு நிர்​ண​யம் செய்ய தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும், என வாதிடப்​பட்​டது.

தமிழக அரசு தரப்​பில், பசுமை தீர்ப்​பா​யத்​தின் தடை உத்​தரவு காரண​மாக பள்ளிக்கரணை பகு​தியை சுற்​றி​லும் கட்​டிட அனு​மதி கோரி பெறப்​பட்ட விண்​ணப்​பங்​கள் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்க இயல​வில்​லை.

ஏற்​கெனவே பெறப்​பட்ட 47 விண்​ணப்​பங்​கள் நிலு​வை​யில் உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டது. இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், இந்த வழக்​கின் இறுதி வி​சா​ரணையை வரும் ஆக.3-க்கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT