தமிழகம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமானத்துக்கு தடை: பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வழக்கு

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்​றளவுக்கு எந்த கட்​டு​மானங்​களுக்​கும் ஒப்​புதல் வழங்​கக்​கூ​டாது என்ற பசுமை தீர்ப்​பாய உத்​தரவை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், இதுதொடர்​பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்​பாக தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரணை மேற்​கொண்ட தென்​மண்டல தேசிய பசுமை தீர்ப்​பா​யம், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்​டர் சுற்​றளவுக்கு எந்​தவொரு கட்​டு​மானங்​களுக்​கும் ஒப்​புதல் வழங்​கக்​கூ​டாது என தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு செப்​டம்​பரில் உத்​தர​விட்​டிருந்​தது.

          

அந்த உத்​தர​வுப்​படி சென்னை பெருநகர வளர்ச்சி குழு​மம் (சிஎம்​டிஏ), பள்ளிக்கரணை சதுப்பு நிலப்​பகு​தி​களைச் சுற்றி சுமார் ஒரு கிமீ சுற்​றளவுக்கு எந்த கட்​டு​மானங்​களுக்​கும் அனு​மதி வழங்க முடி​யாது என மறுப்பு தெரி​வித்து கடந்த அக்​டோபரில் உத்​தர​விட்​டது.

இந்த உத்​தர​வால் பள்ளிக்கரணையை சுற்​றி​யுள்ள பகு​தி​களில் அடுக்​கு​மாடி கட்​டு​மானப்​பணி​கள் முழு​மை​யாக ஸ்தம்​பித்​துள்​ள​தாகக் கூறி ரியல் எஸ்​டேட் நிறு​வனங்​களின் கூட்​டமைப்​பான கிரெ​டாய் சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

அதில், எவ்​வித அறி​வியல் பூர்​வ​மான ஆய்​வும் மேற்​கொள்​ளாமல் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்​றளவுக்கு எந்​தவொரு கட்​டு​மானங்​களும் கட்​டக்​கூ​டாது என தேசிய பசுமை தீர்ப்​பா​யம் பிறப்​பித்​துள்ள உத்​தரவு சட்​ட​விரோத​மானது என்​ப​தால் அந்த உத்​தரவை ரத்து செய்ய வேண்​டும் என கோரி​யிருந்​தது.

இந்த வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி எம்​.எம்​. வஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக தமிழக அரசு மற்​றும் சிஎம்​டிஏ, மாநக​ராட்சி உள்​ளிட்​டோர் மூன்று வாரங்​களில் பதிலளிக்க உத்​தர​விட்டு வி​சா​ரணையை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

பள்​ளிக்​கரணை​யில் உள்ள ராம்​சார் சதுப்பு நிலங்​களை ஒட்​டிய பகு​தி​களில் அடுக்​கு மாடி குடி​யிருப்​பு​களை​யோ, வணிக வளாகங்​களையோ கட்​டக்​கூ​டாது என ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றம் தடை விதித்​திருந்த நிலை​யில் பள்​ளிக்​கரணை​யில் சதுப்பு நிலத்தை ஒட்​டிய பகு​தி​களில் பன்​னடுக்கு அடுக்​கு​மாடி குடி​யிருப்பு வளாகம் கட்ட தனி​யார் நிறு​வனம் ஒன்​றுக்கு சிஎம்​டிஏ அனு​மதி அளித்​துள்​ள​தாக சர்ச்சை எழுந்​தது.

அதுதொடர்​பாக​வும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. அந்த வழக்​கில், சிஎம்​டிஏ தரப்​பில், சதுப்பு நிலத்​தில் அந்த குடி​யிருப்​பு​களை கட்ட அனு​ம​தி​யளிக்​க​வில்லை என்​றும், சதுப்பு நிலத்​துக்கு வெளியே உள்ள தனி​யார் பட்டா நிலத்​தில் தான் அந்த கட்​டிடம் கட்ட சிஎம்​டிஏ சார்​பில் அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது என்​றும் அரசு தரப்​பில் விளக்​கமளிக்​கப்​பட்​டது.

அதையடுத்து உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, பள்​ளிக்​கரணை சதுப்பு நிலம் தொடர்​பான வழக்கு உச்ச நீதிமன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வரு​வ​தால், இந்த பிரச்சினை தொடர்பாக உச்ச நீதி​மன்​றத்தை நாட உத்​தர​விட்​டுள்​ளது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT