தமிழகம்

அன்பில் மகேஸின் ஜாமீன் விசாரணை தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் உள்​ளிட்ட அனுமதி​ வழங்கும் விவகாரத்தில் ரூ.400 கோடி முறைகேடு புகாரில் திமுக முன்னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ், கைதாகி சிறை​யில் உள்ளார்.

இந்நிலையில் ஜாமீன் கோரி இவர் தாக்கல் செய்த மனு மீதான விசா​ரணை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி வி. லட்​சுமி நாராயணன் முன்​பாக நேற்று நடந்​தது. அப்​போது மனுதாரர் தரப்​பில் அவகாசம் கோரிய​தால் விசாரணையை நவ.24-க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்​தர​விட்டார்.

இந்த வழக்​கில் கீழமை நீதிமன்​றத்​தில் சரணடைந்த முத்​துக்​குமாரின் கார் ஓட்​டுநரான சரவணனை நவ.18-ம் தேதி (இன்று) மாலை வரை ஒருநாள் மட்​டும் போலீ​ஸார் காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதி அளித்து உத்​தர​விட்​டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT