தமிழகம்

​திராவிட கோட்டையில் தவெக போட்ட ஓட்டை: காங்கிரஸ், தேமுதிக, விசிக, பாஜக, தமாகா படுதோல்வியின் பின்னணி

வே.கோபாலகிருஷ்ணன்

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் தவெக​வுக்கு வீசிய ஆதரவு அலை, திமுக, அதி​முக கூட்​ட​ணிக்​குள் வெடித்த ஈகோ மோதல் போன்​றவற்​றால் காங்​கிரஸ், தேமு​திக, விசிக, பாஜக, தமாகா ஆகிய கட்​சிகள் படு​தோல்​வியை சந்​தித்​துள்​ளன.

தமிழகத்​தின் 234 தொகு​தி​களுக்​கு​மான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த ஏப். 23-ம் தேதி நடை​பெற்​றது. திமுக, அதி​முக, விஜய்​யின் தவெக மற்​றும் சீமானின் நாதக எனப் பலமுனைப் போட்டி நில​விய​தில், ‘விஜய் அலை​யில்’ சிக்கி பல ஜாம்​ப​வான்​கள் சரிந்​துள்​ளனர்.

குறிப்​பாக, திமுக, அதி​முக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ், தேமு​திக, விசிக, பாஜக, தமாகா ஆகிய கட்​சிகள் படு​தோல்​வியைச் சந்​தித்​துள்​ளன. இதுகுறித்​து, விவரம் அறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: திமுக கூட்​ட​ணி​யில் 28 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ், வெறும் 5 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றுள்​ளது.

இத்​தோல்விக்​குச் சில முக்​கியக் காரணங்​கள் அடுக்​கப்​படு​கின்​றன. அதாவது, அதிக இடங்​களைக் கேட்டு திமுகவை அதிருப்​திக்​குள்​ளாக்​கிய காங்​கிரசுக்​கு, வெற்றி வாய்ப்பே இல்​லாத கடின​மான சில தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டது.

மேலும், வேட்​பாளர் தேர்​வில் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தன்​னிச்​சை​யாகச் செயல்​பட்​ட​தாக எழுந்த சர்ச்சை ஆகியவை ராகுல் காந்​தி, ஸ்டா​லின் கூட்​டுப் பிரச்​சா​ரம் ரத்து செய்​யும் அளவுக்​குச் சென்​றது.

இதனால், காங்​கிரஸ் போட்​டி​யிட்ட தொகு​தி​களில் திமுக​வினர் களப்​பணி​யில் ஆர்​வம் காட்​டாததும் அக்​கட்​சி​யின் வீழ்ச்​சிக்கு வழி​வகுத்​தது. இதே​போல், 8 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி, வெறும் 2 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றுள்​ளது.

இதற்​கு, தொண்​டர்​களின் விருப்​பத்​திற்கு மாறாகக் குறைந்த தொகு​தி​களை ஏற்​றது, தேர்​தலில் போட்​டி​யிடு​வ​தாகக் கூறி​விட்​டுத் தலை​வர் திரு​மாவளவன் பின்​வாங்​கியது, வேட்​பாளர்​கள் தேர்​வில் சொதப்​பியது போன்​றவை அக்​கட்​சி​யினரிடையே தொய்வை ஏற்​படுத்​தி​யது.

சரி​யான வாக்​காளர் ஒருங்​கிணைப்பு இல்​லாததும் விசிக​வின் இந்​தச் சறுக்​கலுக்கு முக்​கியக் காரண​மாகக் கூறப்​படு​கிறது. திமுக கூட்​ட​ணிக்​குள் திடீரென நுழைந்து 10 தொகு​தி​களைப் பெற்ற தேமு​திக, ஒரே ஒரு இடத்​தில் மட்​டுமே வெற்றி பெற்​றுள்​ளது.

ஸ்டா​லினை மேடை​யில் வைத்​துக் கொண்​டே, பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் குறித்​துப் பேசி​யது மற்​றும் திரு​மாவளவனை மரி​யாதைக் குறை​வாக நடத்​தி​யாக வெடித்த சர்ச்சை போன்​றவை கூட்​டணி கட்​சி​யினரை ஆத்​திரமடையச் செய்​தது.

இதன் விளை​வாக, கூட்​ட​ணிக் கட்​சி​யினர் தேமு​தி​க​விற்​குச் சரி​யாக வேலை செய்​ய​வில்​லை. அடிக்​கடி கூட்​டணி மாறும் அக்​கட்​சி​யின் முடி​வும் மக்​களிடையே அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யது. இதனால், அக்​கட்​சிக்கு பெரும் தோல்வி ஏற்​பட்​டுள்​ளது.

இதே​போல், அதி​முக கூட்​ட​ணி​யில் 26 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட பாஜக, ஒரே ஒரு இடத்​தில் மட்​டுமே வெற்றி பெற்று பெரும் அதிர்ச்​சி​யைச் சந்​தித்​துள்​ளது. பாஜக பலமாக உள்ள சென்​னை, கோவை, கன்​னி​யாகுமரி ஆகிய இடங்​களைத் தராமல், அக்​கட்​சிக்கு வாக்கு வங்​கியே இல்​லாத திமுக​வின் கோட்​டைகளை பழனி​சாமி ஒதுக்​கி​னார்.

அண்​ணா​மலைக்கு எதி​ரான லாபியை நயி​னார் நாகேந்​திரன், பழனி​சாமி​யுடன் இணைந்து முன்​னெடுத்​தது மற்​றும் டெல்லி வழங்​கிய தேர்​தல் நிதி கடைக்​கோடித் தொண்​டர்​களைச் சென்​றடை​யாதது பாஜக​வின் தோல்​வியை உறுதி செய்​தது.

ஆரம்​பம் முதல் 10 தொகு​தி​களைக் கேட்ட ஜி.கே.​வாசனுக்​கு, அதி​முக வெறும் 5 இடங்​களை மட்​டுமே ஒதுக்​கியது. அது​வும், ‘தாமரை’ சின்​னத்​தில் போட்​டி​யிட வேண்​டும் என்ற நிபந்​தனை​யுடன்.

இதற்கு ஏற்​கெ​னவே அதி​முக ஆதர​வில் எம்பி சீட் பெற்​று​விட்​டு, கடந்த நாடாளு​மன்ற தேர்​தலில் பாஜக​விற்கு ஆதர​வாகச் செயல்​பட்​ட​தால் வாசன் மீது பழனி​சாமி கடும் கோபத்​தில் இருந்​தார். இதனால், வாக்கு வங்​கியே இல்​லாத இடங்​களை ஒதுக்கி வாசனைப் பழி​வாங்​கியது அதி​முக தலை​மை.

இறு​தி​யில் தமாகா ஒரு இடத்​தில் கூட வெற்றி பெற முடி​யாமல் துடைத்​தெறியப்​பட்​டது. தமிழக மக்​கள் இந்​தத் தேர்​தலில் கூட்​ட​ணிக் கணக்​கு​களை​யும், பாரம்​பரிய வாக்கு வங்​கி​களை​யும் புறந்​தள்​ளி​விட்​டு, ஒரு புதிய மாற்​றத்​தைத் தேர்வு செய்​துள்​ளனர்.

இதன் மூலம், காங்​கிரஸ், பாஜக உள்​ளிட்ட தேசி​யக் கட்​சிகளும், பிராந்​தி​யக் கட்​சிகளும்​ தமிழகத்​தில்​ தங்​கள்​ செல்​​வாக்​கை இழந்​து நிற்​பது தெளி​வாகி​யுள்​ளது. அதே​நேரத்​தில்​ கூட்​ட​ணிக்​குள்​ நில​விய ஈகோ மோதலும்​ இந்​த தோல்​விக்​கு மிகப்​பெரிய ​காரண​மாக இருப்​ப​தை​யும்​ மறுக்​க முடி​யாது. இவ்​​வாறு அந்​த வட்​டாரங்​கள்​ கூறின.

SCROLL FOR NEXT