தமிழகம்

சசிகலா கட்சியில் சேர்ந்த ஒரே நாளில் உசிலம்பட்டி தொகுதி வேட்பாளரானார் அய்யப்பன்

செய்திப்பிரிவு

மதுரை: ​தி​முக​விலிருந்து விலகி சசிகலாவின் அஇபுமமுக​வில் சேர்ந்த உசிலம்​பட்டி முன்​னாள் எம்​எல்ஏ அய்​யப்​பன் ஒரே இரவில் உசிலம்​பட்டி வேட்​பாள​ரா​னார். அவர் இபிஎஸ், ஓபிஎஸ், ஸ்டா​லினை அடுத்து தற்​போது சசிகலா​ கட்சியில் சேர்ந்தார்.

மதுரை மாவட்​டம் செக்​கானூரணி அருகே திரு​மங்​கலம் தொகு​திக்​குட்​பட்ட கொக்​குளத்​தைச் சேர்ந்​தவர் அய்​யப்​பன். உசிலம்​பட்டி தொகுதி வேட்​பாள​ராக்கி 2021-ல் வெற்​றி​பெறச் செய்​தார் அதி​முக முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மார்.

          

பின்​னர், அதி​முக​வில் பழனி​சாமி அணி, ஓபிஎஸ் அணி என பிளவுபட்​ட​போது, ஓபிஎஸ் பக்​கம் சென்​றார். பின்னர் கடந்த பிப்​.27-ல் ஓபிஎஸ் தலை​மை​யில் திமுக​வில் இணைந்​தார்.

இதனால் மீண்​டும் தனக்கு திமுக​வில் உசிலம்​பட்டி தொகு​தி​யில் போட்​டி​யிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்​பார்த்​திருந்தார். ஆனால் அந்த தொகுதி காங்​கிரஸுக்கு ஒதுக்​கப்​பட்​டது.

இதனால் ஏமாற்​றமடைந்த அய்​யப்​பன், நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் சசிகலாவை சந்​தித்து அக்​கட்​சி​யில் இணைந்​தார். இதையடுத்து அவரை உடனடியாகஉசிலம்​பட்டி தொகுதி வேட்​பாள​ராக சசிகலா அறி​வித்​தார்.

SCROLL FOR NEXT