கோப்புப்படம்

 
தமிழகம்

அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் சிறந்த செவிலியர்களுக்கு ரூ.25 ஆயிரத்துடன் விருது

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் அரசு மற்​றும் தனியார் மருத்துவமனைகளில் அர்ப்​பணிப்பு உணர்​வுடன் பணி​யாற்​றும் சிறந்த செவி​லியர்​களுக்கு ஆண்​டுதோறும் மாநில அளவில் விருது வழங்​கப்​படும் என தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

நடப்​பாண்​டுக்​கான சட்​டப்​பேரவை மானிய கோரிக்​கை​யின் போது, தமிழகத்​தில் அரசு மற்​றும் தனியார் மருத்​து​வ​மனைகளில் அர்ப்​பணிப்பு உணர்​வுடன் பணி​யாற்​றும் சிறந்த செவி​லியர்​களுக்கு ஆண்​டுதோறும் மாநில அளவில் விருது வழங்​கப்​படும் என சுகாதா​ரத் துறை அமைச்​சர் அறி​வித்​திருந்​தார். அதை செயல்​படுத்​தும் வித​மாக சுகாதா​ரத் துறை செயலர் தாரேஸ் அகமது நேற்று வெளி​யிட்ட அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

நோயாளி​களின் நலனுக்​காக அன்​புடனும் கருணை​யுடனும் தன்​னலமற்ற சேவை​யாற்​றும் செவி​லியர்​களைக் கவுர​விக்​கும் வகை​யில், ஆண்​டுதோறும் மே 12-ம் தேதி சர்​வ​தேச செவி​லியர் தினத்தை முன்​னிட்டு தமிழ்​நாடு மாநில சிறந்த செவி​லியர் விருதுகள் வழங்​கப்​பட உள்​ளன.

இந்த விருதுக்கு மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​தில் இருந்து 3 செவி​லியர்​கள், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணிகள் இயக்​ககம் மற்​றும் தொழிலா​ளர் அரசு ஈட்​டுறுதி கழகத்​தில் இருந்து 3 செவி​லியர்​கள், பொது சுகாதா​ரம் மற்​றும் நோய்த்​தடுப்பு மருந்து இயக்​ககத்​தில் இருந்து 3 செவி​லியர்​கள் அல்​லது துணை செவி​லியர்​கள், தனியார் மருத்​து​வ​மனைகளில் இருந்து 3 செவி​லியர்​கள் என மொத்​தம் 12 பேர் தேர்வு செய்​யப்​படுவார்​கள்.

விருதுக்​குத் தேர்ந்​தெடுக்​கப்​படும் ஒவ்​வொரு செவி​லியருக்​கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் பரிசுத்​தொகை வழங்​கப்​படும். இதற்​காக 2026-27-ம் நிதி​யாண்டு முதல் ஆண்​டுதோறும் ரூ.3 லட்​சம் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​படும். செவி​லியர்​களின் புறநோயாளி​கள் மற்​றும் உள்​நோயாளி​கள் பராமரிப்பு, பிரசவ கால சேவை​கள், நேரம் தவறாமை, தூய்மை பராமரிப்பு, நோயாளி​களிடம் கனிவாக நடந்து கொள்​ளுதல் உள்​ளிட்ட பல்​வேறு செயல்​பாடுகளின் அடிப்​படை​யில் இந்த விருதுக்​கான தேர்வு நடை​பெறும். இதற்​கான ஒருங்​கிணைப்பு அதி​காரியாகச் சென்​னை​யில் உள்ள மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணிகள் இயக்​குநர் செயல்​படுவார். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

அரசு மருத்துவமனைகளில் 1,695 செவிலியர் பணியிடங்கள்

முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தலின்​படி, தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​து​வ​மனைகள், அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைகளின் மருத்​து​வக் கட்​டமைப்பை மேலும் வலுப்​படுத்​தும் வகை​யில் ரூ.42.72 கோடி மதிப்​பீட்​டில் புதிதாக 1,695 தொகுப்​பூதிய செவி​லியர் பணி​யிடங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. தேசிய நல​வாழ்​வுக் குழும விதி​களின்​படி, மாவட்ட நலச் சங்​கங்​கள் மூலமாக தொகுப்​பூதிய அடிப்​படை​யில் இந்த பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட உள்​ளன.

மருத்​து​வம், ஊரக நலப் பணிகள் இயக்​ககத்​தின் கட்​டுப்​பாட்​டில் உள்ள அவசரகால மகப்​பேறு, பச்​சிளம் குழந்​தைகள் பராமரிப்பு மையங்​களுக்கு 1,039 செவி​லியர்​கள், மருத்​து​வக் கல்வி, ஆராய்ச்சி இயக்​ககத்​தின் கட்​டுப்​பாட்​டில் உள்ள மருத்​து​வ​மனைகளுக்கு 656 செவி​லியர்​கள் நியமிக்​கப்​பட உள்​ளனர் என்று சுகாதா​ரத் துறை செயலர் தாரேஸ் அகமது வெளி​யிட்ட மற்றொரு அரசாணையில் கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT