70 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த போதிலும் நியூஸி. அணியை மீட்டது நிக்கோல்ஸ், பிலிப்ஸ் ஜோடி

முதல் நாள் ஆட்டத்தில் 243 ரன்கள் சேர்ப்பு
ஹென்றி நிக்​கோல்ஸ்

ஹென்றி நிக்​கோல்ஸ்

Updated on: 
2 min read

வெலிங்டன்: இந்​தியா - நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில், பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இந்​திய அணி​யில் ஜஸ்பிரீத் பும்ரா, ஆகாஷ் தீப், அன்​ஷுல் கம்​போஜ், பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 வேகப்​பந்து வீச்​சாளர்​கள் இடம் பெற்​றனர். ரவீந்​திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்​கப்​பட​வில்லை.

பேட்​டிங்கை தொடங்​கிய நியூஸிலாந்து அணிக்கு தொடக்​கம் அதிர்ச்​சி​யாக இருந்​தது. பும்ரா வீசிய முதல் ஓவரின் 3-வது பந்​தில் கேப்​டன் டாம் லேதம், ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் போல்​டானார். மற்​றொரு தொடக்க வீரரான டெவன் கான்வே 4 ரன்​கள் எடுத்த நிலை​யில் அன்​ஷுல் கம்​போஜ் பந்​தில் விக்​கெட் கீப்​பர் ரிஷப் பந்த்​திடம் பிடிகொடுத்து வெளியேறினார். 12 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் களமிறங்​கிய ரச்​சின் ரவீந்​திரா நிதானமாக விளை​யாடினார்.

பொறுமையாக பேட் செய்த ரச்​சின் ரவீந்​திரா 50 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 15 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆகாஷ் தீப் பந்​தில், ரிஷப் பந்த்​திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்​டினார். இதையடுத்து களமிறங்​கிய டேரில் மிட்​செல் ஒரு ரன் எடுத்த நிலை​யில் பும்ரா பந்​து​வீச்​சில் ஷார்ட் லெக் திசையில் நின்ற யஷஸ்வி ஜெய்​ஸ்வாலிடம் பிடிகொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

இதன் பின்​னர் களமிறங்​கிய டாம் பிளண்​டல் 22 பந்​துகளை சந்​தித்து 5 ரன்​கள் எடுத்த நிலை​யில் பும்ரா பந்​தில் முதல் சிலிப் திசையில் நின்ற ஷுப்​மன் கில்​லிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்​டினார். 70 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் களமிறங்​கிய கிளென் பிலிப்​ஸுடன் இணைந்து ஹென்றி நிக்​கோல்ஸ் பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்​தார். இந்த ஜோடி இந்​திய பந்​து​வீச்சை கடும் சோதனைக்கு உட்​படுத்தி நிதானமாக விளை​யாடி ரன்​கள் சேர்த்​தது.

அற்​புத​மாக விளை​யாடிய ஹென்றி நிக்​கோல்ஸ் 188 பந்​துகளில், 12 பவுண்​டரி​களு​டன் சதம் விளாசினார். இது அவரது 12-வது சத​மாக அமைந்​தது. அவருக்கு உறுதுணை​யாக விளை​யாடிய கிளென் பிலிப்ஸ் 73 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் அரை சதம் அடித்​தார். நேற்​றைய முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் நியூஸிலாந்து அணி 82 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 243 ரன்​கள் எடுத்​தது.

ஹென்றி நிக்​கோல்ஸ் 221 பந்​துகளில், 14 பவுண்​டரி​களு​டன் 113 ரன்​களும், கிளென் பிலிப்ஸ் 182 பந்​துகளில், 13 பவுண்​டரி​களு​டன் 94 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். இந்த ஜோடி 6-வது விக்​கெட்​டுக்கு 173 ரன்​கள் சேர்த்​துள்​ளது. இந்​திய அணி தரப்​பில் பும்ரா 17 ஓவர்​களை வீசி 5 மெய்​டன்​களு​டன் 52 ரன்​களை வழங்கி 3 விக்​கெட்​களை வீழ்த்​தினார். அன்​ஷுல் கம்​போஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். கைவசம் 5 விக்​கெட்​கள் இருக்க இன்று 2-வது நாள் ஆட்​டத்தை எதிர்​கொள்​கிறது நியூஸிலாந்து அணி.

<div class="paragraphs"><p>ஹென்றி நிக்​கோல்ஸ்</p></div>
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

X