தமிழகம்

மீட்டர் கட்டண உயர்வு அறிவிப்பு இல்லை: ஆட்டோ தொழிற்சங்கம் செப்.19-ல் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் கடந்த 14 ஆண்​டு​களாக ஆட்டோ மீட்டர் கட்​ட​ணம் உயர்த்​தப்​ப​டாத நிலை​யில் மீட்​டர் கட்​ட​ணத்தை உயர்த்​தக்​கோரி ஆட்டோ ஓட்​டுநர்​கள் மற்றும் தொழிற்​சங்​கத்​தினர் பல்​வேறு கட்ட போராட்​டங்​களில் ஈடு​பட்டு வந்​தனர்.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் போக்​கு​வரத்து துறை மானிய கோரிக்​கை​யின் போது, ஆட்டோ மீட்​டர் கட்​ட​ணத்தை திருத்​தியமைக்க விரை​வில் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று மட்​டுமே அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் தெரி​வித்​தார்.

இதையடுத்து, தமிழக அரசு உடனடி​யாக ஆட்டோ மீட்​டர் கட்​ட​ணத்தை மறு நிர்​ண​யம் செய்து உயர்த்தி அறிவிக்க வலி​யுறுத்தி வரும் 19-ம் தேதி சனிக்​கிழமை மாலை 4 மணி​யள​வில், எழும்​பூர், ராஜரத்​தினம் மைதானம் அரு​கில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என அனைத்து ஆட்டோ தொழிற்​சங்​கக் கூட்​டமைப்​பினர் அறி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT