சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் ஆட்டோ மீட்டர் கட்டணங்கள் கடைசியாக அரசால் அதிகாரப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட்டன.
அப்போது முதல் 1.8 கிலோ மீட்டருக்கு குறைந்த பட்ச கட்டணமாக ரூ.25-ம், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.12-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த 13 ஆண்டுகளில் பெட்ரோல், சிஎன்ஜி எரிபொருள் விலைகள், வாகனக் காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துவிட்டதால் பழைய கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்குவது சாத்தியமில்லை எனவும் புதிய கட்டணத்தை அறிவிக்கவும் ஓட்டுநர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை ஏற்று அரசாரணை நேற்று வெளியிடப்பட்டது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகவும், அதைத் தொடர்ந்து கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் ரூ.25 எனவும், காத்திருப்பு கட்டணம் ஒரு நிமிடத்துக்கு ரூ.1 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.