சிவசூர்யா

 
தமிழகம்

தந்தையுடன் பேட்மிண்டன் விளையாடியபோது காவல் உதவி ஆணையரின் மகன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ​காவல் உதவி ஆணை​யரின் மகன், தந்தை கண் எதிரே பேட்மிண்டன் விளை​யாடிய​போது மயங்கி விழுந்து உயி​ரிழந்​தார். சென்னை திரு​மங்​கலம் காவல் சரக உதவி ஆணை​ய​ராக பணி​யாற்றி வருபவர் கவுதமன். இவர் சென்னை போரூர் ஆதம்​பாக்​கம் மெட்ரோ நகரில் குடும்​பத்​துடன் வசித்து வரு​கிறார்.

இவரது இளைய மகன் சிவசூர்யா (23). நேற்று முன்​தினம் இரவு தனது வீட்​டின் அருகே உள்ள மைதானத்​தில் தந்​தை​யும் மகனும் பேட்​மிண்​டன் விளை​யாடிக் கொண்​டிருந்​தனர். அப்​போது திடீரென சிவசூர்​யா​வுக்கு நெஞ்​சுவலி ஏற்​பட்டு மயங்கி கீழே விழுந்​தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கவுதமன், அரு​கில் இருந்த நண்​பர்​கள் உதவி​யுடன் மகனை மீட்டு வடபழனி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றார். அங்கு சிவசூர்​யாவை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், அவர் ஏற்​க​னெவே உயி​ரிழந்​து​ விட்​ட​தாக தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT