கோப்புப் படம்

 
தமிழகம்

ஓபிசி பிரிவினரை சாதி பெயர்கள் அடிப்படையில் கணக்கெடுக்க வேண்டும்: பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பில் ஓபிசி பிரி​வினரை மத்​திய, மாநில அரசுகளால் வெளி​யிடப்​பட்ட பட்​டியலில் உள்ள சாதி பெயர்​கள் அடிப்​படை​யில் கணக்​கெடுக்க வேண்​டும் என்று மத்​திய அரசை வலி​யுறுத்தி தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று ஒரு​மன​தாக தீர்​மானம் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை அமைச்​சர் வே.சம்​பத்​கு​மார், மத்​திய அரசின் 2027-ம் ஆண்​டின் இந்​திய மக்​கள் தொகை கணக்​கெடுப்​பில் இதர பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினரின் (ஓபிசி) சாதி விவரங்​களை மாநில மற்​றும் மத்​திய அரசுகளால் வெளி​யிடப்​பட்ட பட்​டியலில் உள்ள சாதிப் பெயர்​களின் அடிப்​படை​யில் மட்​டுமே பதிவு செய்ய வேண்​டும் என்று மத்​திய அரசை வலி​யுறுத்தி அரசினர் தனி தீர்​மானத்தை முன்​மொழிந்து பேசி​ய​தாவது: நாட்​டில் 1931-ல் முழு​மை​யான சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

இந்​திய சுதந்​திரத்​துக்​குப் பிறகு 2011 வரை நடை​பெற்ற மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பில் எஸ்​சி, எஸ்டி பிரி​வினரின் சாதி விவரங்​கள் மட்​டுமே சேகரித்து வெளி​யிடப்​பட்​டது. 2027 மக்​கள் தொகை கணக்​கெடுப்​பில் முதன்​முறை​யாக முழு சாதி​வாரி கணக்​கெடுப்பு நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டு, முதல்​கட்ட பணி முடிவடைந்​துள்​ளது. 2-ம் கட்​ட​மாக பிப்​.27-ம் தேதி நடை​பெற உள்ள மக்​கள்​தொகை கணக்​கெடுப்​புக்​காக விவரங்​கள் சேகரிக்​கப்பட உள்ள 40 வினாக்​கள் அடங்​கிய பட்​டியலை மத்​திய அரசு கடந்த மாதம் அறி​வித்​தது.

அதில் வினா எண் 10-ல் எஸ்​சி, எஸ்டி மற்​றும் சாதி தொடர்​பான விவரங்​கள் கேட்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. சாதி விவரங்​களை வீடு வீடாக சென்று சேகரிக்​கும் இந்த நிகழ்​வில் எஸ்​சி, எஸ்டி சாதி​யில் கணக்​கெடுப்பு செயலி​யில் ஏற்​கெனவே பதிவு செய்​யப்​பட்ட பட்​டியலில் இருந்து நேரடி​யாக தேர்வு செய்​யும் வகை​யில் சீராக அமைக்​கப்பட உள்​ளது.

ஆனால், பிற்​படுத்​தப்​பட்ட மற்​றும் மிகப் பிற்​படுத்​தப்​பட்ட ஓபிசி வகுப்​பினருக்கு சாதி என்ற பிரி​வின்​கீழ் பொது​மக்​கள் தெரிவிக்​கும் பெயர்​களை நேரடி​யாக தட்​டச்சு செய்​யும் திறந்​தவெளி பதிவு முறை பின்​பற்​றப்பட உள்​ள​தாக தெரி​கிறது. இது ஓபிசி பிரி​வினரின் பிர​தி​நி​தித்​து​வம் கல்​வி, வேலை​வாய்ப்​பில் பாதிப்பை ஏற்​படும். அதற்​காகவே இந்த தீர்​மானம் கொண்​டு​வரப்​படு​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

தீர்​மானத்​துக்கு ஆதர​வாக அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜூ​னா, ராஜேஷ்கு​மார், வன்​னியரசு, ஷாஜ​கான் மற்​றும் சி.​வி.சண்​முகம் (அதி​முக), போஜ​ராஜன் (பாஜக), கணேஷ்கு​மார் (பாமக), மாரி​முத்து (இந்​திய கம்​யூனிஸ்ட்), செல்​ல​சாமி (மார்க்​சிஸ்ட்) ஆகி​யோர் ஆதரித்து பேசினர். பின்​னர் குரல் வாக்​கெடுப்பு மூலம் இத்​தீர்​மானம் ஒரு​மன​தாக நிறை​வேற்​றப்​பட்​டது.

SCROLL FOR NEXT