தமிழகம்

சட்டப்பேரவை சம்பவங்கள் ஆட்சி மாற்றத்துக்கே வழிவகுத்துவிடும்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்

செய்திப்பிரிவு

சென்னை: ‘சட்டப்பேரவையில் நடக்​கும் சம்​பவங்​கள் ஆட்சி மாற்​றத்​துக்கே வழி​வகுத்து விடும்’ என்று எம்​எல்​ஏ.க்​களுக்கு நடந்த புத்​தாக்க பயிற்சி முகாமில் பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் எச்​சரித்​துள்​ளார்.

தமிழகத்​தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்​டத்​தொடர் ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர் உரை​யுடன் நாளை தொடங்​கு​கிறது. இதையொட்​டி, எம்​எல்​ஏக்​களுக்கு 2 நாள் புத்​தாக்க பயிற்சி முகாம் சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் நேற்று தொடங்​கியது.

புத்​தாக்க பயிற்​சியை முதல்​வர் விஜய், குத்​து​விளக்கு ஏற்றி தொடங்கி வைத்​தார். அதைத்​தொடர்ந்​து, பேர​வை​யில் கடைபிடிக்க வேண்​டிய நடை​முறை​கள், சட்​டப்​பேரவை விதிகள் குறித்து எம்​எல்​ஏ.க்களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்டது.

இந்த முகாமில் தவெக மட்​டுமல்​லாது காங்​கிரஸ், விசிக, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், அமம​முக ஆகிய கட்​சிகளின் எம்​எல்​ஏ.க்​களும் கலந்து கொண்​டனர்.

முன்​ன​தாக பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் பேசி​ய​தாவது: இந்த அவை​யின் மூல​மாக நீங்​கள் ஒலிக்​கிற குரல்​தான் இந்த அரசுக்​கும் தமிழக மக்​களுக்​கும் பெருமை சேர்க்​கிற ஒரு குரலாக இருக்​கும். நூல​கங்​களுக்​குச் செல்​கிற பழக்​கத்தை எம்​எல்​ஏ.க்​கள் ஏற்​படுத்​திக் கொள்ள வேண்​டும்.

அப்​போது​தான் அண்​ணா, காம​ராஜர், கக்​கன், கம்​யூனிஸ்ட் தலை​வர்​கள் என்ன பேசி​னார்​கள் என்று தெரி​யும். அதன்​மூல​மாக கண்​ணி​ய​மாக, கவுர​வ​மாக நாட்டு மக்​கள் விரும்​பு​கிற உரையை நீங்​கள் தயார் செய்து கொள்ள முடி​யும்.

சட்​டப்​பேர​வை​யில் நடக்​கிற சில நிகழ்​வு​களை வெளி​யிலே மக்​கள் பார்க்​கின்​றார்​கள் என்​பது மட்​டுமல்ல, ஒரு நிகழ்​வு, ஒரு சம்​பவம், ஒரு மிகப்​பெரிய மாற்​றத்தை ஒரு கட்​சிக்கு எதி​ராகத் திருப்​பியதை​யும், ஒரு கட்சி ஆட்​சிக்கு வரு​வதற்​குத் துணை புரிந்​ததை​யும் கடந்த கால சட்டப்பேரவை சம்பவங்களால் அறிந்து கொள்ள முடி​யும். எனவே எச்​சரிக்​கை​யுடன் நடந்​து​ கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT