கோப்புப் படம்

 
தமிழகம்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி சென்னையில் ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: பணி நிரந்​தரம், ஊதிய உயர்வு உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஆஷா பணியாளர்கள் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்தினர்.

மலை கிராமங்​களில் சுகா​தார நலத் திட்​டங்​களை அமல்​படுத்தி வரும் ஆஷா பணி​யாளர்​களுக்கு பணி நிரந்​தரம், ஊதிய உயர்​வு, போனஸ் வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தமிழ்​நாடு ஆஷா பணி​யாளர் சங்​கம் சார்​பில் சிவானந்தா சாலை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

          

சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் வஹிதா நிஜாம் தலைமை​யில் நடந்த இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் ஆயிரத்​துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்​கேற்​று, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்​தி​ய​வாறு கோஷங்​களை எழுப்​பினர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் வஹிதா நிஜாம் கூறிய​தாவது: தமிழகத்​தில் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆஷா பணியாளர்கள் மலைப்​பகு​தி​களில் பணி​யாற்றி வரு​கின்​றனர். இவர்​கள், அங்கு வசிக்​கும் கர்ப்​பிணி​களை கண்​காணித்​தல், குழந்​தைகளுக்கு தடுப்​பூசி செலுத்​துதல் உள்​ளிட்ட முக்​கிய பணி​களை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

புதுச்சேரியில் ரூ.18 ஆயிரம்: ஆஷா பணி​யாளர்​களுக்கு மத்​திய, மாநில நிதித் திட்​டத்​தின் கீழ் ரூ.5,500 மட்​டுமே ஊதி​ய​மாக வழங்​கப்​பட்டு வரு​கிறது. ஊதி​யத்தை உயர்த்தி வழங்​கக்​கோரி நீண்ட நாட்​களாக போராடி வரு​கிறோம். ஆனால் அரசு இதில் கவனம் செலுத்​த​வில்லை என்​பது வருத்தமளிக்கிறது.

அண்டை மாநிலங்​களைப் போல எங்​களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்​டும். புதுச்​சேரி​யில் ஆஷா பணி​யாளர்​களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் ஊதி​யம் வழங்​கப்​படு​கிறது. எனவே தமிழக அரசு எங்​களது கோரிக்​கைகளை பரிசீலித்து உடனடி​யாக நடை​முறைப்​படுத்த வேண்​டும்.

துறை சார்ந்த காலிப்​பணி​யிடங்​களில் எங்​களை பணி​யமர்த்​தி, பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும். பிரசவ கால உதவித் தொகை​யாக 6 மாதவிடுப்​புடன் கூடிய ஊதி​யம் வழங்​க வேண்​டும். அதே​போல் ஈஎஸ்ஐ, போனஸ், பென்​ஷன் போன்ற சமூக பாது​காப்​பு​களை​யும் அரசு ஏற்​படுத்​தித் தர வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT