சென்னை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து

பயணிகள், ஊழியர்கள் வெளியேற்றம்; போர்டிங் பாஸ் நிறுத்தம்
சென்னை விமான நிலையத்​தில் உள்ள தனி​யார் விமான நிறுவன அலுவலகத்​தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமான ஆவணங்கள், கோப்புகள். (அடுத்த படம்) அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஊழியர்கள், பயணிகள். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |

சென்னை விமான நிலையத்​தில் உள்ள தனி​யார் விமான நிறுவன அலுவலகத்​தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமான ஆவணங்கள், கோப்புகள். (அடுத்த படம்) அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஊழியர்கள், பயணிகள். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |

Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் தனி​யார் விமான நிறுவன அலு​வல​கத்​தில் திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. பயணி​கள், ஊழியர்​கள் வெளி​யேற்​றப்​பட்​டனர். பயணி​களுக்கு போர்​டிங் பாஸ் சிறிது நேரம் நிறுத்​தப்​பட்​டது.

சென்னை விமான நிலைய சர்​வ​தேச முனை​யத்​தின் டெர்மினல்​-2, இரண்​டாவது தளத்​தின் புறப்​பாடு பகு​தி​யில் தனி​யார் ஏர்​லைன்ஸ் அலு​வல​கம் உள்​ளது. இந்த அலு​வல​கத்​தில் நேற்று நண்​பகல் 12 மணி​யள​வில் திடீரென மின்​கசிவு ஏற்​பட்டு புகை மண்​டலம் சூழ்ந்​தது.

உடனே மத்​திய தொழில் பாது​காப்​புப் படை​யினர், அவசர காலதீயணைப்​பான்​கள் மூலம் தீயை அணைக்க முயற்சி மேற்​கொண்​டனர். மேலும் சென்னை விமான நிலை​யத்​தின் 2 தீயணைப்பு வாக​னங்​கள், மாநில அரசின் 2 வாக​னங்​களில் விரைந்து வந்த வீரர்​கள் 40 நிமிடங்​கள் போராடி தீயை அணைத்​து, புகை மண்​டலத்​தை​யும் வெளி​யேற்​றினர்.

பயணிகளுக்கு மூச்சுத் திணறல்: முன்​ன​தாக புகை​யில் சிக்​கித் தவித்த பயணி​கள், விமான நிலைய ஊழியர்​கள் அவசர​மாக வெளி​யேற்​றப்​பட்​டனர். புகை மண்​டலத்​தால் சில பயணி​களுக்கு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டது. சர்​வ​தேச முனை​யத்​தில் புறப்​பாடு விமானங்​களில் பயணிக்​கும் பயணி​களுக்கு போர்​டிங் பாஸ் கொடுப்​பது தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது.

சென்னை விமான நிலைய அதி​காரி​கள் கூறுகை​யில், “தனி​யார் ஏர்​லைன்ஸ் அலு​வல​கத்​தில் திடீரென ஏற்​பட்ட மின்​கசி​வால், சிறிய தீ விபத்து ஏற்​பட்​டது. புகை மண்​டலத்​தால் பயணி​கள் பாதிக்​கப்​படக்​கூ​டாது என்​ப​தற்​காக, போர்டிங் பாஸ் கொடுப்​பது நிறுத்​தப்​பட்​டு, பயணி​கள் அனை​வரும் வெளி​யேற்​றப்​பட்​டனர்.

சிறிது நேரத்​தில் நிலைமை சீரடைந்​து​விட்​டது. தீ விபத்து குறித்து விசா​ரணை நடக்​கிறது” என்றனர். சென்னை விமான நிலை​யம் வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில், “சென்னை விமான நிலைய சர்​வ​தேச முனை​யம் டெர்​மினல்-2 புறப்​பாடு பகு​தியில் உள்ள ஒரு விமான நிறுவன அலு​வல​கத்​தில், ஆவணங்​கள் வைத்​திருக்​கும் ஸ்டோர் ரூமில், திடீரென ஏற்​பட்டமின் கசி​வால் தீ விபத்து ஏற்​பட்​டது.

அது உடனடியாக கட்​டுப்​படுத்​தப்​பட்​டது. இதனால் எந்​த​வித பாதிப்​பும் இல்​லை. விமான சேவை​கள் அனைத்​தும் வழக்​கம் போல் இயங்கி வருகின்​றன. தீ விபத்து குறித்து முறை​யான விசா​ரணை நடக்​கிறது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த திடீர் தீ விபத்​தால், தனி​யார் விமான நிறுவன அலு​வல​கத்​தில் இருந்த பல்​வேறு முக்​கிய கோப்​பு​கள், ஆவணங்​கள் எரிந்துவிட்​டன. 2 விமான நிலைய ஊழியர்​களுக்கு மூச்​சுத்​திணறல் ஏற்​பட்​ட​தால், அவர்​களுக்கு விமான நிலைய மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>சென்னை விமான நிலையத்​தில் உள்ள தனி​யார் விமான நிறுவன அலுவலகத்​தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமான ஆவணங்கள், கோப்புகள். (அடுத்த படம்) அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஊழியர்கள், பயணிகள். | <em>படங்கள்: எம்.முத்துகணேஷ்</em> |</p></div>
டெட் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 5% குறைப்பு: விரைவில் அரசாணை வெளியாகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in