கோப்புப் படம்
கோவை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்களை 90 நிமிடத்தில் ஆலோசித்தது எப்படி என்பது குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை மிகக் குறைவு. ஆனால், செவிலியர் பற்றாக்குறை இருக்கிறது. அந்த நிலை விரைவில் சரி செய்யப்படும்.
அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்களை 90 நிமிடத்தில் ஆலோசிக்க முடியாது. அதேநேரம் திட்டங்களுக்கான விவரங்கள் கையேடுகளில் இருக்கின்றன. அதை பார்த்து எப்படி செய்ய வேண்டும் என சொல்லி இருக்கிறோம். மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும்.
பல்வேறு கட்சிகளில் இருந்தும் தவெகவுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எடுத்த முடிவுகள் தவறாகத்தான் போயிருக்கின்றன. முதல்வர் விஜய்க்கு ரசிகராக யாரும் ஓட்டு போடவில்லை. அவரை தலைவராக ஏற்றுக்கொண்டதால் தான் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.